ஜிமெயிலில் நம் வேலையை வெகுவாக குறைக்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்கிறது

ஜிமெயிலில் நம் வேலையை வெகுவாக குறைக்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்கிறது
HIGHLIGHTS

கூகுளின் ஜிமெயில் சேவை சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டு புதிய அம்சங்களை வழங்கப்பட்ட நிலையில் விரைவில் ஸ்மார்ட் கம்போஸ் எனும் வசதி வழங்கப்பட இருக்கிறது.

கூகுளின் ஜிமெயில் சேவை சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டு புதிய அம்சங்களை வழங்கப்பட்ட நிலையில் விரைவில் ஸ்மார்ட் கம்போஸ் எனும் வசதி வழங்கப்பட இருக்கிறது. கூகுளின் I/O 2018 டெவலப்பர் நிகழ்வில் இதற்கான அறிவிப்பை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த வசதி மின்னஞ்சல்களை வேகமாக டைப் செய்ய உதவுகிறது. ஜிமெயில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் சொற்றொடர்களை பரிந்துரைக்கும், இவற்றை தேர்வு செய்ய கீபோர்டில் டேப் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நேரம் மிச்சப்படுத்துவதோடு எழுத்து மற்றும் இலக்கிய பிழைகளை பெருமளவு தவிர்க்க முடியும்.

ஜிமெயிலில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் வரும் வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிசூட் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் வரயிருக்கும் மாதங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட ஜிமெயில் சேவையை இயக்க வாடிக்கையாளர்கள் ஜிமெயில் Settings – Try the new Gmail ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். 

கூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்வின் முதல் நாளில் ஜிமெயிலில் ஸ்மார்ட் கம்போஸ் மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் இது பயன்படுத்தப்பட இருக்கும் பல்வேறு இதர துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளும், விளக்க வீடியோக்களும் ஒளிபரப்பப்பட்டன.

அந்த வகையில் ஜிமெயில், கூகுள் அசிஸ்டண்ட், மருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் இது சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளும் கூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்வின் முதல் நாளில் வெளியிடப்பட்டன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo