யூடியூப் நாளுக்கு நாள் அதிக வளர்ச்சி, அதில் இந்தியர்களே மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெர்ட்டுள்ளது

யூடியூப்  நாளுக்கு  நாள் அதிக வளர்ச்சி, அதில்  இந்தியர்களே மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெர்ட்டுள்ளது
HIGHLIGHTS

யூடியூபில் சேனல் தொடங்கும் இந்தியர்கள் மக்களை எளிதில் கவரும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

1,200 இந்தியர்கள் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்ற மைல்கல் சாதனையாளர்கள் இந்தியாவில்தான் அதிகம்.

யூடியூப் தனது பயனர்கள் வளர்ச்சி, பயன்பாடு, தளத்தின் வளர்ச்சி குறித்த ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவுடனான தங்களது வளர்ச்சி எப்படி என்பதையும் வெளியிட்டுள்ளது.

யூடியூப் என்பது இன்று பலதரபட்ட செய்திகள், விஷயங்களை எடுத்துக் கொள்ள மக்கள் விரும்பும் முதல் தளமாக இருக்கிறது. அதேபோல் பொழுதுபோக்கு சார்ந்தும், தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், எடுத்துக் கொள்ளவும் யூடியூப் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

”யூடியூம் தளமானது பலதரப்பட்ட தகவல்களை பலதரப்பட்ட மக்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு இடமாக இருக்கிறது. மக்களை எப்போதும் இணைப்பில் வைத்துக் கொள்ளும் தளமாகவும் இருக்கிறது “ என யூடியூபின் சிஇஒ சுசன் வோஜ்சிக்கி பேட்டியில் கூறியுள்ளார்.

அறிக்கையில் உலக அளவில் இந்தியா எங்களுக்கு மிகப்பெரும் பயனர்களைக் கொண்ட நாடு. அதுவும் அதிவேக வளர்ச்சி கொண்ட நாடு என குறிப்பிட்டுள்ளது.

யூடியூபில் சேனல் தொடங்கும் இந்தியர்கள் மக்களை எளிதில் கவரும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்ற மைல்கல் சாதனையாளர்கள் இந்தியாவில்தான் அதிகம். ஐந்து வருடங்களுக்கு முன் வெறும் இரண்டு பேர் மட்டும்தான் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரே ஆண்டில் மொபைல் ஃபோன்களில் யூடியூப் பார்க்கும் வாடிக்கையாளர்கள் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. 60 சதவீதம் உலகின் மிக முக்கிய நாடுகளில் உள்ள மெட்ரோ சிட்டிகளிலிருந்து பார்வையாளர்கள் வருவதாக குறிப்பிட்டுள்ளது.

”ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் யூடியூபின் வளர்ச்சி 100 சதவீதம் அதிகரிக்கிறது” என யூடியூபின் தயாரிப்பு மேலாண்மை அதிகாரி ஆடம் ஸ்மித் குறிப்பிடுகிறார் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo