பேஸ்புக் போட்டோ, வீடியோ போன்ற எந்த போஸ்டாயும் எந்த மீடியா உடனும் ஷேர் செய்யலாம்.

பேஸ்புக் போட்டோ, வீடியோ  போன்ற எந்த போஸ்டாயும்  எந்த மீடியா உடனும் ஷேர்  செய்யலாம்.
HIGHLIGHTS

புதிய டேட்டா போர்டபிலிட்டி விதிகளை வெளியிட்டு இருப்பதுடன் பிரிட்டன், ஜெர்மனி, பிரேசில் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் விவாதம் செய்து வருகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவையில் புதிய அம்சத்தை சோதனை செய்கிறது. இந்த அம்சம் புகைப்படஙகள் மற்றும் மீடியா தரவுகளை மற்ற ஆன்லைன் சேவைகளுடன் பகிர்ந்து கொள்ள

ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவையில் புதிய அம்சத்தை சோதனை செய்கிறது. இந்த அம்சம் புகைப்படஙகள் மற்றும் மீடியா தரவுகளை மற்ற ஆன்லைன் சேவைகளுடன் பகிர்ந்து கொள்ள வழிசெய்யும். முதற்கட்டமாக ஃபேஸ்புக்கில் இருக்கும் மீடியா தரவுகளை கூகுள் போட்டோஸ் சேவைக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

இந்த அம்சம் முதலில் அயர்லாந்தில் உள்ள பயனர்களுக்கு வழங்கப்பட்டு, அதன்பின் பயனர் மதிப்பீட்டிற்கு ஏற்ப மேம்படுத்தப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க இந்த அம்சம் 2020 ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் வழங்கப்படுகிறது.

புதிய டேட்டா போர்டபிலிட்டி விதிகளை வெளியிட்டு இருப்பதுடன் பிரிட்டன், ஜெர்மனி, பிரேசில் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் விவாதம் செய்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கட்டுப்பாட்டு வாரியங்கள் ஃபேஸ்புக் பயனர் விவரங்களை இயக்குவதில் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறதா என ஆய்வு செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் புதிய டேட்டா போர்டபிலிட்டி விதிகளை அறிவித்துள்ளார்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo