சீனாவுடனான எல்லை பிரச்சனைக்கு பிறகு இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் சீன செயலியான டிக்டாக் தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் டிக்டாக் செப்டம்பர் முதல் முழுமையாக தடை செய்யப்படுகிறது.
சமீபத்தில் இந்தியாவில் சீனா செயலிகளை தடை செய்யப்பட்டு இருந்தது அதில் மிகவும் பிரபலமான டிக்டாக் ஆப் ஒன்றாகும் அந்த ஆப் இந்தியாவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுருந்தது ஷோர்ட்விடியோவுக்கு புகழ் பெற்றது டிக்டாக், அந்த வகையில் டிக்டாக்கைப் போன்றே சோர்ட் வீடியோ அம்சத்தைக் கொண்டு வர ஃபேஸ்புக் பல முயற்சியை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக சமூகவலைதள நிபுணர் மாத் நவர்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் ஃபேஸ்புக்கின் குறுவீடியோ குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, டிக்டாக்கில் உள்ளது போன்றே குறுவீடியோக்களையும், ஸ்வைப் செய்தால் அடுத்த வீடியோ உடனடியாகத் தோன்றும்படியும் ஒரு அம்சத்தை உருவாக்கி வருகிறது.
இந்த நிலையில், தற்போது பிரபல சமூகவலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம், டிக் டாக் பாணியில் புதியதொரு அம்சத்தைக் கொண்டு வர சோதனை செய்து வருகிறது. ஏற்கனவே, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
மேலும், இந்த குறுவீடியோக்களை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் எளிதாக பகிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கமெண்ட்ஸ், லைக்ஸ் போன்றவைகளும் எளிமையாக்கப்படுகின்றன. இது தற்சமயம் சோதனை முறையில் செயலாக்கப்பட்டு வருகிறது. இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. இதனால், ஃபேஸ்புக்கின் புதிய அப்டேட்டில் இந்த வசதி இருக்காது. விரைவில் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக தடை செய்யப்பட்ட பிரபல டிக்டாக் செயலியை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனமும், டுவிட்டர் நிறுவனமும் ஆர்வம் காட்டி வந்தன. இதனிடையே கடந்த மாதம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பைட்டான்ஸ் நிறுவனம் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. ஆனால், அப்போது எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
மேலும், தற்போது டிக்டாக்கின் வணிகத்தில் முதலீடு செய்வதற்காக ரிலைன்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளன. இந்த செய்திக்கு ரிலையன்ஸ் தரப்பிலும், டிக்டாக் தரப்பிலும் எந்த மறுப்பும் வரவில்லை.