5 கோடி பயனாளர்களின் அக்கவுண்டை ”ஹேக்” செய்யப்பட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

Updated on 29-Sep-2018
HIGHLIGHTS

பேஸ்புக்கின் 5 கோடி பயனாளர்களின் அக்கவுண்டகளை கையாளக்கூடிய டிஜிட்டல் லாகின் கோட்களை ஹேக்கர்கள் திருடிவிட்டதாக அந்நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.

பல ஆயிர கோடிக்கணக்கான மக்கள் இந்த பேஸ்புக் பயன் படுத்தி வருகிறார்கள் . இந்நிலையில் பேஸ்புக்கின் 5 கோடி பயனாளர்களின் அக்கவுண்டகளை கையாளக்கூடிய டிஜிட்டல் லாகின் கோட்களை ஹேக்கர்கள் திருடிவிட்டதாக அந்நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது. 

இத்தகைய  பேஸ்புக்கின் மிக மோசமான பாதுகாப்பு அம்ச பாதிப்பாக கருதப்படுகிறது. இதற்கிடையில் தங்கள் பயனாளர்களின் அக்கவுங்களை தவறாக பயன்படுத்தப்பட்டதா அல்லது தகவல்கள் திருடப்பட்டதாக என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஹேக் செய்தவர்களின் இடம், எந்தக் குழுவினர் குறித்துக் கண்டறிய முடியவில்லை. 

இதன் காரணமாக பேஸ்புக்கின் பங்குகள் 2.6% மிகவும் சரிவைச் சந்தித்துள்ளன. நடப்பாண்டின் தொடக்கத்தில் அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா, பேஸ்புக்கின் 87 மில்லியன் பயனாளர்களின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்தியது தலைப்புச் செய்தியானது. இதனால் உலகம் முழுவதும் பேஸ்புக் நிறுவனத்தின் பிரைவசி குறித்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தொடக்க நிலை தகவல்களின் படி, மிகப்பெரிய அளவில் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க், ஹேக் விவகாரம் மிகவும் மோசமான ஒன்று. தலைமைச் செயல் அதிகாரி ஷெர்ல் சாண்ட்பெர்க் பேஸ்புக் அக்கவுண்ட் உடன் , தனது அக்கவுண்ட் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :