பழைய லோகோவை பார்த்து பார்த்து போர் ஆகிடுச்சு புதிய லோகோவை வெளியிட்ட Facebook

Updated on 06-Nov-2019

ஃபேஸ்புக் நிறுவனம் தனது லோகோவை மாற்றியமைத்துள்ளது. நிறுவனம் துவங்கி 15 ஆண்டுகள் கழித்து ஃபேஸ்புக் தனது லோகோவை மாற்றியுள்ளது. புதிய லோகோ நிறுவனத்திற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் ஃபேஸ்புக்கில் இருந்து (from Facebook) என குறிப்பிடும் வழக்கத்தை இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கியது. வரும் வாரங்களில் புதிய லோகோவினை தனது சேவைகளில் அறிமுகம் செய்ய ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. 

புதிய லோகோ ஒற்றை நிறத்தில் இல்லாமல் ஃபேஸ்புக் வழங்கும் சேவைகளை குறிப்பிடும் வகையில் பல்வேறு நிறங்களில் இருக்கும். 

 புதிய லோகோ ஃபேஸ்புக் வழங்கும் அனைத்து சேவைகளிலும் மாற்றப்படுகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் ஆப், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஆகுலஸ், வொர்க்பிளேஸ், போர்டல் மற்றும் கலிப்ரா போன்றவற்றுக்கு புதிய லோகோ காப்படுகிறது.

புதிய லோகோ நிறுவனம் மற்றும் செயலியை தோற்றத்தின் அடிப்படையில் வித்தியாசப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :