பயனர்களை நடுங்க வைக்கும் ஃபேஸ்புக் காப்புரிமை புதிய தகவல்…!

Updated on 04-Jul-2018
HIGHLIGHTS

ஃபேஸ்புக் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் அந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துக்கு உரிமை கோரியுள்ளது. இந்த தொழில்நுட்பம் பயனர்களின் சாதனங்களை பயன்படுத்தி, அவர்களின் அருகில் உள்ள ஆடியோக்களை பதிவு செய்யும்

பேஸ்புக் விளம்பரங்களை வழங்க அந்நிறுவன ஊழியர்கள் யாரும் உங்களின் மொபைல் மைக்ரோபோன் உரையாடல்களை ரகசியமாக கேட்பது கிடையாது. இருப்பினும் இதற்கான சாத்தியக்கூறு இல்லையென நினைக்க வேண்டாம்.  

ஃபேஸ்புக் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் அந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துக்கு உரிமை கோரியுள்ளது. இந்த தொழில்நுட்பம் பயனர்களின் சாதனங்களை பயன்படுத்தி, அவர்களின் அருகில் உள்ள ஆடியோக்களை பதிவு செய்யும் – இவற்றில் நீங்கள் மற்றவர்களுடன் உரையாடுவது – அல்லது உங்களின் படுக்கை அறையில் உள்ள ஒலி – உள்ளிட்டவற்றை பதிவு செய்து அவற்றை நிறுவனத்துக்கு அனுப்பும்.

ஜூன் 14-ம் தேதி காப்புரிமை விண்ணப்பம் சார்ந்த விவரங்களை மெட்ரோ பதிவிட்டு இருந்தது. இதில் ஃபேஸ்புக் எவ்வாறு உங்களின் மொபைல் போன் மைக்-ஐ தானாக ஆன் செய்து பதிவு செய்கிறது என்ற விவரங்கள் பதிவிடப்பட்டு இருந்தது. 

அதன்படி ஃபேஸ்புக் அதிக பிட்ச் கொண்ட ஆடியோ சிக்னல்களை பிராட்கேஸ்ட் தரவுகளில் எம்பெட் செய்யும், இந்த ஒலி மனிதர்களுக்கு கேட்காது. என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிக்னல் உங்களின் மொபைலில் ஆடியோவை பதிவிட்டு, அவற்றை ஃபேஸ்புக்கிற்கு அனுப்பும்.

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஃபேஸ்புக், இந்த தொழில்நுட்பம் பயனர்களிடத்தில் அமல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேவையில்லாத பட்சத்தில் ஏன் இதற்கான காப்புரிமையை பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவன பொது ஆலோசகர் ஆலென் லொ மேஷபிள் தளத்துக்கு அளித்திருக்கும் அறிக்கையில், “சில புதிய தொழில்நுட்பங்களுக்கான காப்புரிமைகளை மற்ற நிறுவனங்களுக்கு முன் பதிவு செய்வது வழக்கமான நடைமுறை தான். இதுபோன்ற காப்புரிமைகள் எதிர்கால தொழில்நுட்பம் சார்ந்தவை என்பதோடு, இவை மற்ற நிறுவனங்களால் வணிக மயமாக்க முடியும்," என தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் தற்சமயம் ஃபேஸ்புக் மற்ற நிறுவனங்கள் உங்களின் அழைப்புகள் மற்றும் ஆடியோக்களை பதிவு செய்ய விடாமல் தடுத்து இருக்கிறது. 

“இந்த தொழில்நுட்பம் ஃபேஸ்புக்கின் எவ்வித சாதனங்கள் மற்றும் சேவைகளிலும் இதுவரை சேர்க்கப்படவும் இல்லை, சேர்க்கப்படாது" என ஆலென் லொ தெரிவித்திருக்கிறார்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :