ஃபேஸ்புக் அதன் மெசஞ்சர் ஆப்யில் பல்வேறு புதிய வசதிகளை சேர்ப்பதற்கான அப்டேட்களை வழங்கி வந்தது .
இப்பொழுது அந்த பயனர்களுக்கு பூமராங் வீடியோக்கள், செல்ஃபிக்களில் பேக்கிரவுண்டை தானாக பிளர் செய்யும் புதிய செல்ஃபி மோட் புதிய அம்சத்தை சேர்க்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் போட்டோ மற்றும் வீடியோ உடன் மெசேஞ்சர் ஸ்டிக்கடிகர்களை ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி போன்றவை இதில் வழங்கப்பட்டுள்ளது.
மெசஞ்சர் ஆப்யில் ஏற்கனவே நார்மல், வீடியோ, டெக்ஸ்ட், பூமராங் மற்றும் செல்ஃபி உள்ளிட்ட கேமரா மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் வரிசையில் புதிய செல்ஃபி மோட் மெசஞ்சரில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்க்கு முன்னதாக மெசஞ்சர் ஆப்யில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய AR ஸ்டிக்கர்கள் மூலம் சாட்களை சுவாரஸ்யமாக்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் மெசஞ்சரின் புதிய வடிவமைப்பு பெற்ற ஆப் மற்றும் பழைய பதிப்புகளில் அப்டேட் செய்வோருக்கு புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக மெசஞ்சர் லைட் செயலியில் அனிமேட் செய்யப்பட்ட ஜிஃப் படங்களுக்கான வசதி சேர்க்கப்பட்டது. இருப்பினும் , இந்த வசதியை இயக்க ஜிபோர்டு போன்ற மூன்றாம் தரப்பு கீபோர்டு ஆப் களை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
இனி கேமரா ஐகானின் அருகில் இருக்கும் ஸ்டிக்கர் ஆப்ஷனை கிளிக் செய்து புதிதாக ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி பொருளை சேர்த்துக் கொள்ள முடியும். மெசஞ்சரில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகள் உலகம் முழுக்க மெசஞ்சர் ஆப் பயன்படுத்துவோருக்கு வழங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது