Facebook மெசெஞ்சரில் அதிரடியான அம்சம், whatsapp போலவே இருக்கும்

Facebook மெசெஞ்சரில்  அதிரடியான  அம்சம், whatsapp போலவே இருக்கும்
HIGHLIGHTS

Massanger IOS பதிப்பில் பயனர்கள் தங்களின் ப்ரோஃபைலை லாக் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது

பயோமெட்ரிக் முறையில் இயங்கும் புதிய அம்சம் வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது

இந்த அம்சம் முதற்கட்டமாக சில ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது

ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் ஐஒஎஸ் பதிப்பில் பயனர்கள் தங்களின் ப்ரோஃபைலை லாக் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது. இதனை ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கிறது. 

பயோமெட்ரிக் முறையில் இயங்கும் புதிய அம்சம் வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில், இதே அம்சம் தற்சமயம் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் தனிநபர் சாட்களுக்கு பொருந்தாது. இது ஒட்டுமொத்த செயலிக்கும் கூடுதல் பாதுகாப்பினை வழங்கும்.

இந்த அம்சம் கொண்டு ஐபோன் பயனர்கள் தங்களின் மெசஞ்சர் செயலியை டச் ஐடி அல்லது ஃபேஸ் ஐடி மூலம் லாக் செய்து கொள்ள வழி வகுக்கும். இந்த அம்சம் முதற்கட்டமாக சில ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும்.

லாக் செட்டிங்கில் செயலி எவ்வளவு நேரம் கழித்து லாக் செய்யப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் ஆப்ஷன் கொண்டிருக்கும். இது ஒரு நிமிடத்தில் துவங்கி ஒரு மணி நேரம் வரை இருக்கலாம். 

ஃபேஸ்புக் தற்சமயம் மெசஞ்சர் செயலியில் மேற்கொண்டு வருகிறது. சமூக வலைதள செயலிகளில் இதுபோன்ற கூடுதல் பாதுகாப்பு பயனர்களுக்கு அத்தியாவசிய தேவையாக மாறி இருக்கிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo