பேஸ்புக் மெசஞ்சர் ஆப் யில் டார்க் மோட் அறிமுகம்.

Updated on 18-Apr-2019
HIGHLIGHTS

ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் யில் டார்க் மோட் அம்சத்தை கொண்டு வந்துள்ளது.

உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குகிறது

செட்டிங்ஸ் பகுதியில் தெரியும் டார்க் மோட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

ஃபேஸ்புக்  நிறுவனம் வாட்ஸ்அப்  யில் டார்க்  மோட்  அம்சத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது.  மேலும்  இந்த அறிவிப்பை அதன்  அதிகாரபூர்வ  வெப்சைட்டில்  இதனை  தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டார்க் மோட் வசதிக்கான அறிவிப்பு வெளியானது. பின் நான்கு மாதங்கள் கழித்து இந்த அம்சம் இந்தியா உள்பட சில நாடுகளில் வழங்கப்பட்டது. எனினும், இதனை ஆக்டிவேட் செய்ய எமோஜியை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

முன்னதாக டார்க் மோட் வசதி நிலா ஈமோஜியை அனுப்பினால் செயல்படும் வகையில் வழங்கப்பட்டிருந்தது. எனினும், இது தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டது. ஜனவரி மாத வாக்கில் இந்த அம்சம் சில நாடுகளில் வழங்கப்பட்டிருந்தது.

இந்த அம்சத்தை இயக்க மெசஞ்சரில் உங்களது ப்ரோஃபைல் புகைப்படத்தை க்ளிக் செய்து செட்டிங்ஸ் பகுதியில் தெரியும் டார்க் மோட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் திரை முழுக்க இருளாகி இருப்பதை பார்க்க முடியும். டார்க் மோட் ஆக்டிவேட் ஆகியிருக்கும் நிலையில், திரையின் பிரகாசம் குறைக்கப்பட்டிருக்கும். இதனால் குறைந்த வெளிச்சமுள்ள சூழல்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :