FACEBOOK MESSENGER யில் VIDEO CHAT எல்லாம் ஷேர் செய்யலாம்.
மெசஞ்சர் ரூம்ஸ் சேவையில் இருந்தபடி லைவ் பிராட்கேஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
ரூம் கிரியேட்டர் பிராட்கேஸ்ட்டை பார்க்க யாரை வேண்டுமானாலும் அழைக்க முடியும்.
பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் ரூம்ஸ் சேவையில் இருந்தபடி லைவ் பிராட்கேஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக லைவ் பிராட்கேஸ்ட் அம்சத்தில் அதிகபட்சம் 50 பேருடன் வீடியோ கால் பேச முடியும்.
லைவ் பிராட்கேஸ்ட் செய்ய பயனர் மெசஞ்சரில் ரூம் ஒன்றை உருவாக்கி ப்ரோஃபைல், பேஜ் அல்லது குரூப்களுக்கு பிராட்கேஸ்ட் செய்ய வேண்டும். ரூம் கிரியேட்டர் பிராட்கேஸ்ட்டை பார்க்க யாரை வேண்டுமானாலும் அழைக்க முடியும். இதில் கலந்து கொள்வோர் பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
இன்வைட் அனுப்பப்பட்டதும், ரூமில் கலந்து கொள்வோருக்கு நோட்டிபிகேஷன் வரும். இதனை க்ளிக் செய்தால் ரூமில் கலந்து கொள்ள முடியும். நேரலை செய்வோர் பிராட்கேஸ்ட் செய்யும் போது அதில் கலந்து கொண்டவர்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் ரூம் கிரியேட்டர், பேஸ்புக்கில் ரூம் எங்கு பகிரப்படுகிறது, யார் இதை பார்க்க வேண்டும் என்பதையும், யார் யார் அழைக்கப்பட்டு உள்ளனர் என்பதையும் தீர்மானிக்க முடியும்.
புதிய லைவ் பிராட்கேஸ்ட் அம்சம் பேஸ்புக் மற்றும் மெசஞ்சரில் சில நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த அம்சம் மேலும் சில நாடுகளுக்கு நீட்டிக்கப்படும் என தெரிகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile