பேஸ்புக் மெசஞ்சர் ஆப்யில் பயனர் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மெசஞ்சரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சம் முன்னதாக வாட்ஸ்அப் ஆப்யில் வழங்கப்பட்டது.
வாட்ஸ்அப் போன்றே மெசஞ்சர் ஆப்யிலும் மெசேஜ்களை தனிநபர் மற்றும் க்ரூப் சாட்களில் அழிக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மெசஞ்சரில் டெலிட் செய்ய வேண்டிய மெசேஜ்களை க்ளிக் செய்து “Remove for Everyone” ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்த பின் அழிக்கப்பட்ட மெசேஜ்கள் இருந்த இடத்தில் மெசேஜ்கள் அழிக்கப்பட்டதை உணர்த்தும் தகவல் இடம்பெறுகிறது. மெசஞ்சரில் அனுப்பிய மெசேஜ்களை டெலிட் செய்ய பத்து நிமிடங்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அம்சம் படிப்படியாக வழங்கப்பட்டு தற்சமயம் உலகம் முழுக்க வழங்கப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மெசஞ்சரில் மெசேஜ்களை அழித்தபின், இந்த அம்சம் உருவாக்கப்படுவதை ஃபேஸ்புக் உறுதி செய்திருந்தது. மெசேஜ்களை பயனர் தங்களுக்கு மட்டும் அழித்துக் கொள்ள மெசேஜ்களை செலக்ட் செய்து “Remove for You” ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இந்த ஆப்ஷனை க்ளிக் செய்ததும் மெசேஜ்கள் பயனருக்கு மட்டும் டெலிட் செய்யப்பட்டு விடும். ஃபேஸ்புக் இந்த அம்சத்தை முதற்கட்டமாக எழுத்துக்கள், க்ரூப் சாட்கள், போப்ட்டோக்கள் , வீடியோக்கள், லி்ண்க் உள்ளிட்டவற்றை அனுப்பிய 10 நிமிடங்களில் அழிக்க முடியும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் IOS . இயங்குதளங்களுக்கான மெசஞ்சர் ஆப்யில் வழங்கப்படுகிறது.