ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆப்யில் புதிய டார்க் மோட் வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் IOS அறிமுகம் செய்யப்பட்டது இதனை தொடர்ந்து தற்பொழுது. நீங்கள் உங்களின் சாதனங்களில் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
மெசஞ்சரில் டார்க் மோட் வசதியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஃபேஸ்புக் அறிவித்தது. விரைவில் வெளியாகும் என ஃபேஸ்புக் தெரிவித்திருந்தாலும், இந்த அம்சம் கிடைக்க நான்கு மாதங்களாகி விட்டது. சில மாதங்களாக சோதனையில் இருந்து வந்த டார்க் மோட் அம்சம் பயனர்களுக்கு வழங்கப்படாமலே இருந்தது.
இந்தியாவிலும் ஆண்ட்ராய்டு மற்றும் IOS . தளங்களில் டார்க் மோட் வசதி சீராக வேலை செய்கிறது. மெசஞ்சரில் டார்க் மோட் ஆக்டிவேட் செய்ய சாட் ஸ்கிரீனில் நிலா எமோஜியை அனுப்பினாலே போதுமானது. புதிய டார்க் மோட் பரவலாக வழங்கப்பட்டிருக்கிறது.
தற்சமயம் இந்த அம்சம் அனைத்து நாடுகளிலும், அனைத்து தளங்களிலும் வழங்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும், பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், செக் குடியரசு, சவுதி அரேபியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் டார்க் மோட் வழங்கப்பட்டிருப்பதாக ரெடிட் பயனர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் புதிய அம்சம் மிக விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என தெரிகிறது. முழு சோதனை நிறைவுறதாதை வெளிப்படுத்தும் விதமாக டிஸ்ப்ளே முழுக்க இருளாகாது. மேலும் பயனர்கள் எமோஜியை அனுப்பியதும் "You Found Dark Mode!" என தெரியும்.
இதுதவிர டார்க் மோட் ஸ்க்ரீன் முழுக்க இருளாகாமல், சிலபகுதிகளில் கருப்பு நிறமில்லாமல், வெள்ளையாக காட்சியளிக்கிறது. மெசஞ்சரின் அடுத்தடுத்த அப்டேட்களில் இது சரிசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.