பேஸ்புக் நிறுவனம் லிப்ரா என்ற பெயரில் க்ரிப்டோகரென்சி 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை வெறும்சோசியல் மீடியா பயன்பாடுகள் மட்டுமின்றி இணைய வர்த்தகம் மற்றும் சர்வதேச பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றுக்கும் பயன்படுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.
புதிய க்ரிப்டோகரென்சி தவிர புதிதாக கலிப்ரா என்ற பெயரில் டிஜிட்டல் வாலெட் போன்று இயங்கும் சேவையை ஃபேஸ்புக் உருவாக்கி இருக்கிறது. கலிப்ரா ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சியை சேமித்து வைத்துக் கொண்டு, அவற்றை அனுப்பவோ அல்லது பயன்படுத்தவோ வழி செய்யும். கலிப்ரா ஃபேஸ்புக்கின் மெசஞ்சர், வாட்ஸ்அப் போன்ற குறுந்தகவல் சேவைகளுடன் இணைக்கப்பட இருக்கிறது.
லிப்ரா கரன்சி என்றால் என்ன அது எப்படி பயன்படும்.?
இன்றைய உலகம் டிஜிட்டல்லாக மாறியுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே அந்த வகையில் சமீபத்தில் மிகவும் பாப்புலரான பிட்காயின் போலவே இது இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த லிப்ரா என்பது ஒரு டிஜிட்டல் கரன்சி நீங்கள் இதை தொட்டுப்பார்க்க முடியாது. இது என்ன எப்படி பயன்படும்
1 லிப்ரா க்ரிப்டோகரன்சி என்பது ஒரு டிஜிட்டல் மணி என்பதால் நீங்கள் ரூபாய் போல தொட்டுப்பார்க்க முடியாது, நீங்கள் இதை ஆன்லைனில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
2 சமீபத்தில் பிட்காயின் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது மேலும் , இதே போல தான் இந்த லிப்ரா கரன்சி யின் இந்த க்ரிப்டோ கரன்சியும் வேலை செய்யும்.
3 இந்த க்ரிப்டோ கரன்சி என்பது முழுக்க முழுக்க ஒரு ஷேர் மார்க்கெட் போல இருக்கும் அதாவது இதன் பயனர்கள் அதிகமாக இருந்தால் லாபம் அதிகமாக இருக்கும் , மேலும் இதன் பயன்முறை குறைய ஆரம்பித்தாள் முழுமையாக சரியாய் தொடங்கி விடும்.
4 நீங்கள் இந்த லிப்ரா கரன்சி பயன்படுத்துவதற்கு எந்த சார்ஜ் இருக்காது இது உங்களுக்கு முழுக்க பேங்க்
போல வேலை செய்யும் இது டிஜிட்டல் வாலெட் போல பயன்படும்.
லிப்ரா என்னும் க்ரிப்டோகரன்ஸியை கட்டணங்கள் ஏதும் இன்றி பயனாளர்கள் உபயோகிக்க முடியும். பிட்காயின் எப்படி இயங்கியதோ அதன் அடிப்படையிலேயே இந்த லிப்ராவும் இயங்கும். ஆனால், பிட்காயினில் இருந்து மாறுபட்டு இருப்பது லிப்ராவின் ஸ்திரத்தன்மை.
உலகின் அத்தனை கரன்ஸிகளாலும் செல்லுபடியாகும் கரன்ஸியாகவே லிப்ரா உள்ளது. ஃபேஸ்புக் குழுவினரே இந்த லிப்ரா கரன்ஸியை இணைந்து உருவாக்கியுள்ளனர். 2020-ம் ஆண்டில் லிப்ரா வெளியாகும் எனக் கூறப்பட்டாலும