Facebook புதிய சேவை கிளவுட் கேமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated on 29-Oct-2020
HIGHLIGHTS

பேஸ்புக் கேமிங் என அழைக்கப்படும் புதிய சேவை கிளவுட்

கிளவுட் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது

பேஸ்புக் கேமிங் என அழைக்கப்படும் புதிய சேவை கிளவுட் சார்ந்த கேம்களை டவுன்லோட் செய்யாமல் பேஸ்புக் செயலி மற்றும் பிரவுசரில் விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

முதற்கட்டமாக இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது மொபைல் கேமிங் துறையில் மிக பெரிய காரியம் ஆகும். இந்த தளத்தில் வெளியாகும் கேம்கள் சீராக இயங்கும் வகையில் இருக்கும் என தெரிவித்து உள்ளது.

ஆஸ்பால்ட் 9 லெஜண்ட்ஸ் பை கேம்லாப்ட், மொபைல் லெஜண்ட்ஸ் – அட்வென்ச்சர் பை மூன்டன், பிஜிஏ டூர் கொல்ப் ஷூட்அவுட் பை கான்க்ரீட் சாப்ட்வேர், சாலிடேர்- ஆர்தர்ஸ் டேல் பை க்யூப்ளிக்ஸ் கேம்ஸ், டபிள்யூடபிள்யூஇ சூப்பர்கார்டு பை 2கே உள்ளிட்ட கேம்கள் இந்த வாரம் முதல் கிடைக்கிறது.

கூகுள் ஸ்டேடியா அல்லது மைக்ரோசாப்ட் எக்ஸ்-கிளவுட் போன்று இல்லாமல், பேஸ்புக்கின் கிளவுட் கேம்கள் நேரடியாக செயலி அல்லது பிரவுசரில் டவுன்லோட் ஆகி சம்பந்தப்பட்ட சாதனத்தில் விளையாட கிடைக்கிறது. பேஸ்புக் கிளவுட் கேமிங் புல் மற்றும் இலவச கேம் என இருவழிகளில் கிடைக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :