பேஸ்புக்கில் மொபைல் டார்க் மோட் வசதி அறிமுகம்.

பேஸ்புக்கில்  மொபைல்  டார்க் மோட் வசதி அறிமுகம்.

ஃபேஸ்புக் நிறுவனம் 2019 எஃப்8 நிகழ்வில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டது. இதில் ஃபேஸ்புக்கிற்கு புதிய தோற்றம் எஃப்.பி.5 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தது. இது எளிமையாகவும், வேகமாகவும் முன்பை விட சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்தது.

அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் தனது மொபைல் செயலியில் புதிதாக டார்க் மோட் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அம்சத்திற்கான பணிகள் துவக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதை வைத்தே டார்க் மோட் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. வரும் வாரங்களில் இந்த அம்சம் முழுமையாக இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய அம்சம் இன்னும் தயாராகவில்லை என்பதால் இதன் வெளியீடு பற்றி எந்த தகவலும் இல்லை.

ஃபேஸ்புக் மொபைலில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படும் விவரங்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக இந்த அம்சம் மொபைல் தளத்தில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் சில பகுதிகளில் மட்டுமே டார்க் மோட் சீராக காட்சியளிக்கிறது. 

இதுதவிர ஃபேஸ்புக் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேவைகளின் பெயர்களில் ஃபேஸ்புக் பிராண்டிங்கை சேர்த்திருக்கிறது. அதன்படி இன்ஸ்டாகிராம் ஃபிரம் ஃபேஸ்புக் (Instagram from Facebook) மற்றும் வாட்ஸ்அப் ஃபிரம் ஃபேஸ்புக் (WhatsApp from Facebook) என மாற்றப்பட்டுள்ளன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo