கிட்ஸ் பேஸ்புக் மெசன்ஜரில் புதிய அப்டேட்
ஃபேஸ்புக் மெசன்ஜர் கிட்ஸ் ஆப் யில் (App )வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் பெற்றோருக்கு பல்வேறு புதிய அம்சங்களை வழங்குகிறது.
மெசன்ஜர் கிட்ஸ் செயலியில் பெற்றோருக்கு கூடுதல் கன்ட்ரோல் வழங்கும் நோக்கில் ஸ்லீப் மோட் எனும் புதிய வசதியை ஃபேஸ்புக் வழங்கியுள்ளது. இந்த அம்சம் கொண்டு குழந்தை பயன்படுத்தும் சாதனத்தில் ஆஃப்டைம்களை குறிக்க முடியும். இவ்வாறு செய்ததும் ஆப் ஸ்லீப் மோடிற்கு சென்று விடும்.
ஸ்லீப் மோடில் இருக்கும் போது குழந்தைகளால் குறுந்தகல்களை அனுப்பவோ, பெறவோ, வீடியோ கால், கேமரா அல்லது நோட்டிஃபிகேஷன் என எதையும் பார்க்க முடியாது. செயலியை திறக்க முயன்றால், செயலி ஸ்லீப் மோடில் உள்ளது, பின்னர் முயற்சிக்கவும் என்ற தகவலை மட்டும் காண்பிக்கும்.
"குறிப்பி்ட்ட நேரத்திற்கு செயலியை இயக்க முடியாத படி செய்யும் வசதியை வழங்க பெற்றோர்கள் கேட்டிருந்தனர். இந்த சமயத்தில் உணவு, வீட்டுப்பாடம், உறக்கம் உள்ளிட்டவற்றுக்கு செலழிக்க செய்ய வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். பெற்றோர் கோரிக்கைக்கு ஏற்ப இந்த அம்சத்தை வழங்கி இருக்கிறோம்," என ஃபேஸ்புக் சேவை பிரிவு மேளாலர் தருன்யா கோவிந்தராஜன் ஃபேஸ்புக் போஸ்ட் மூலம் தெரிவித்துள்ளார்.
ஸ்லீப் மோட் மூலம் குழந்தைகள் மற்ற வேலைகளை செய்ய அதிக நேரம் ஒதுக்க முடியும். ஒவ்வொரு நாளும், செயலியில் செட் செய்யப்படும் நேரத்திற்கு செயலி ஸ்லீப் மோடில் தானாக வைக்கப்பட்டு, குழந்தைகள் பயன்படுத்தாத நிலைக்கு மாற்றப்படும். இந்த அம்சத்தை பெற்றோர் தங்களின் ஃபேஸ்புக் அக்கவுன்ட் மூலம் இயக்க முடியும்.
பெற்றோரின் ஃபேஸ்புக் கணக்கில் இருக்கும் பேரன்ட் கன்ட்ரோல் சென்டர் ஆப்ஷனில் காணப்படும் ஆஃப் டைம்ஸ் (offtimes) ஆப்ஷனை தேர்வு செய்து நேரத்தை செட் செய்து விடும்.
இது எவ்வாறு வேலை செய்கிறது?
– ஃபேஸ்புக் ஆப்யின் உள்ள மெசன்ஜர் கிட்ஸ் கன்ட்ரோல் பக்கத்திற்கு செல்ல வேண்டும். குழந்தையின் பெயரை தேர்வு செய்து ஸ்லீப் மோட் ஆப்ஷனை ஆப் கன்ட்ரோல்ஸ் பகுதியில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்.
– குழந்தைகளுக்கு செயலியை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டிய நேரத்தை செட் செய்ய வேண்டும். வாரநாள் மற்றும் வாரயிறுதி நாட்கள் என வெவ்வேறு நேரத்தை செட் செய்யலாம். நேர அளவை குறிப்பிடத்தகும், நீங்கள் செட் செய்த நேரத்தில் குழந்தைகளால் செயலியை பயன்படுத்த முடியாது என கோவிந்தராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.
ஃபேஸ்புக் செயலியை கொண்டு மெசன்ஜர் கிட்ஸ் செயலியின் அனைத்து ஆப்ஷன்களையும் பெற்றோர் இயக்க முடியும். ஸ்லீப் மோட் மட்டுமின்றி கான்டாக்ட்களை சேர்ப்பது, அழிப்பது உள்ளிட்டவற்றையும் பெற்றோர் புதிய கன்ட்ரோல் பேனலில் இருந்து இயக்க முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile