பேஸ்புக் உங்கள் மெமரியை நினைவு படுத்தும் புதிய அம்சம்…!

Updated on 14-Jun-2018
HIGHLIGHTS

பேஸ்புக் வெப்சைட்டில் மெமரீஸ் (Memories) என்ற பெயரில் புதிய பக்கம் திறக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பேஸ்புக் வெப்சைட்டில் மெமரீஸ் (Memories) என்ற பெயரில் புதிய பக்கம் திறக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய மெமரீஸ் பக்கத்தில் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்ட போஸ்ட், போட்டோக்கள் உள்ளிட்டவற்றை நினைவு கூற முடியும். 

ஃபேஸ்புக்கில் முன்னதாக வழங்கப்பட்டிருந்த ஆன் திஸ் டே (On This Day) அம்சத்தை தினமும் 9 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மெமரீஸ் பக்கம் இதே அம்சத்திற்கான புதிய நீட்சியாக பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த அம்சம் பயனர்களை மனதளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது தெரியவந்தது. 

அந்த வகையில் ஆன் திஸ் டே அம்சம் மேம்படுத்தப்பட்டு, பயனர்கள் தங்களின் கடந்த கால நினைவுகளை மீண்டும் திரும்ப பார்ப்பதை மிக எளிமையாக்குகிறது. புதிய மெமரீஸ் பக்கத்தில் ஆன் திஸ் டே (On This Day), ஃப்ரென்ட்ஸ் மேட் ஆன் திஸ் டே (Friends Made On This Day), ரீகேப்ஸ் ஆஃப் மெமரீஸ் (Recaps of Memories), மெமரீஸ் யூ மே ஹேவ் மிஸ்டு (Memories You May Have Missed) போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

புதிய மெமரீஸ் ஆப்ஷனில் வழங்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு ஆப்ஷனிலும் குறிப்பிட்ட தேதியில் கடந்த ஆண்டுகளில் நீங்கள் பதிவிட்ட போஸ்ட்கள், புகைப்படங்களை பார்க்க முடியும். இத்துடன் மெமரீஸ் பகுதியில் கடந்த வாரம் நீங்கள் தவற விட்ட போஸ்ட்களை உங்களுக்கு பட்டியலிடும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :