உலக முழுவதும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கப்பட்டுள்ளது பயனர்கள் அதிர்ச்சி..!

Updated on 14-Mar-2019
HIGHLIGHTS

இன்ஸ்டகிராம் மற்றும் பேஸ்புக்கில் பயனர்கள் போட்டோ அப்லோட் செய்வதில் சிரமம் ஏற்பட்டது, கிடைத்த தகவலின் படி பார்த்தல் புதன்கிழமை அன்று சுமார் 9:30 மணியிலிருந்து பேஸ்புக் சற்று டவுன் ஆகியது

உலகில் அதிக பயனாளர்களைக் கொண்டிருக்கும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் செயல்பாட்டில், நேற்றிரவு முதல் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் சில இடங்களில் அது தீர்க்கப்படவில்லை என பயனர்கள் புகார் தெரிவித்திருகின்றனர்.


இன்ஸ்டகிராம் மற்றும் பேஸ்புக்கில் பயனர்கள் போட்டோ அப்லோட்  செய்வதில் சிரமம் ஏற்பட்டது, கிடைத்த தகவலின் படி பார்த்தல் புதன்கிழமை அன்று சுமார்  9:30 மணியிலிருந்து பேஸ்புக்  சற்று டவுன் ஆகியது மேலும்  பயனர்களுக்கு  ஒரு போஸ்ட்க்கு லைக்  மற்றும் கமன்ட் செய்வதில்  சிரமம் ஏற்படுகிறது என்று பலரும்  புகார்  அளித்து  வருகிறார்கள் 

பேஸ்புக் புதிய பதிவுகளையும் வெளியிட முடியாமல் போனது. சிலர் தங்கள் பேஸ்புக் அக்கவுண்டில் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் இந்த கோளாறு சரிசெய்யப்படும் என பேஸ்புக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், இந்த பிரச்னை குறித்து நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளார்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :