யூடியூபிற்கு போட்டியாக புதிய கேமிங் ஸ்டிரீமிங்கில் ஆப் அறிமுகம் செய்தது பேஸ்புக்.
ஃபேஸ்புக் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கென பிரத்யேக செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த செயலி கேம் ஸ்டிரீமிங் சேவைகளான ட்விட்ச் மற்றும் யூடியூப் போன்றவற்றுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
ஃபேஸ்புக்கின் புதிய செயலி: வாட்ச், பிளே மற்றும் கனெக்ட் என மூன்று சேவைகளை வழங்குகிறது. வாட்ச் அம்சத்தில் ஸ்டிரீம்களை பார்த்து, புதிய ஸ்டிரீமர்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.இந்த செயலி கொண்டு தளத்தில் உள்ள ஸ்டிரீமர்களின் ஆர்வத்தை தூண்டுவதோடு கேம் ஸ்டிரீமிங் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.
பிளே சேவை கொண்டு கேம்களை முழுமையாக டவுன்லோடு செய்யாமலேயே அதை பற்றி அறிந்து கொண்டு, அதனை உடனடியாக விளையாட தொடரலாம். கனெக்ட் சேவையை கொண்டு கேமிங் குழுக்களுடன் இணைந்து கொள்ள முடியும்.
கேம் ஸ்டிரீமிங்கை எளிமையாக்க விரைவில் கோ லைவ் எனும் அம்சத்தை ஃபேஸ்புக் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. இதை கொண்டு பயனக்கள் விரும்பும் கேம் ஸ்டிரீம்களை அந்தந்த சாதனங்களில் இருந்தே அப்லோடு செய்யலாம். இந்த சேவையில் வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறைகளையும் ஃபேஸ்புக் ஆய்வு செய்வதாக கூறப்படுகிறது.
ஃபேஸ்புக்கின் கேமிங் சார்ந்த டேட்டாக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை ட்விட்ச் மற்றும் யூடியூப் போன்றவற்றை விட மிகவும் குறைவு ஆகும். கடந்த சில ஆண்டுகளில் இரு சேவைகளும் கணிசமான அளவு வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றன. மேலும் 2018 – 2019 காலக்கட்டத்தில் வீடியோக்கள் பார்க்கப்பட்ட நிமிடங்கள் 210 மடங்கு அதிகரித்து இருக்கிறது.
தற்சமயம் ஃபேஸ்புக் கேமிங் ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இதற்கான ஐஒஎஸ் பதிப்பு வெளியிடப்படும் என ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile