பேஸ்புக் நிறுவனம் ஸ்டோரிக்களில் இன்வைட் சேர்க்கும் வசதி விரைவில்; சேர்க்கப்படும்.

பேஸ்புக்  நிறுவனம் ஸ்டோரிக்களில்  இன்வைட்  சேர்க்கும்  வசதி  விரைவில்; சேர்க்கப்படும்.
HIGHLIGHTS

இனி ஃபேஸ்புக் நிறுவனம் தனது பக்கத்தின் ஸ்டோரிஸ் அம்சத்தின் கீழ் புதிய வசதி ஒன்று சேர்த்துள்ளது, அதாவது இந்த புதிய அம்சத்தின் மூலம் உங்கள் வீட்டில் நடக்க இருக்கும் விசேஷ அழைப்பிதழ்களை இங்கு சேர்க்கலாம்

இனி ஃபேஸ்புக்  நிறுவனம் தனது  பக்கத்தின்  ஸ்டோரிஸ்  அம்சத்தின்  கீழ் புதிய  வசதி  ஒன்று சேர்த்துள்ளது, அதாவது இந்த புதிய அம்சத்தின்  மூலம்  உங்கள்  வீட்டில்  நடக்க இருக்கும்  விசேஷ  அழைப்பிதழ்களை இங்கு சேர்க்கலாம், இதன் மூலம்  உங்களின்  உறவினர் மற்றும் நண்பர்களை  எளிதாக  விழாக்களுக்கு அழைக்கலாம்.

ஸ்டோரிக்களில் புதிய வசதியை பயன்படுத்த விழாவிற்கான பக்கத்தை க்ளிக் செய்து ஷேர் பட்டனை செலக்ட் செய்ய வேண்டும். விழாக்களை தனி போஸ்ட் வடிவிலோ அல்லது மெசஞ்சர் மூலமாகவோ அனுப்பாமல், இனி ஷேர் டு யுவர் ஸ்டோரி அம்சத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஸ்டோரிக்களில் விழா அழைப்பிதழ்களை பார்க்கும் நண்பர்கள் ஸ்டோரியில் இருந்தபடி விருப்பம் தெரிவிப்பதற்கான வசதியும் வழங்கப்படுகிறது. ஸ்டோரிக்கு வந்திருக்கும் பதில்களை பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு விழாவில் கலந்து கொள்ள ஸ்டோரி மூலம் விருப்பம் தெரிவித்தவர்களை பார்த்து அவர்களுக்கென க்ரூப் மெசேஜ் ஒன்றும் அனுப்பலாம். 

சர்வதேச மகளிர் தினம் விரைவில் கொண்டாடப்பட இகருக்கும் நிலையில், இந்த அம்சம் சர்வதேச அளவில் வெளியிட சரியான நேரமாக இருக்கும் என கூறப்படுகிறது. சர்வதேச மகிளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் பிரத்யேக ஃபேஸ்புக் ஸ்டிக்கர்களை உருவாக்க ஃபேஸ்புக் வடிவமைப்பாளர் கெனெஷா ஸ்னீட்டுன் சேர்ந்துள்ளார் 

இதுதவிர விழாவை நண்பர்கள் மறக்காமல் இருக்க நினைவூட்டும் ரிமம்பர்  வசதியும் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த அம்சம் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்ளிட்ட பகுதிகளில் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டது. க்ளிக் செய்யக்கூடிய ஸ்டிக்கர் புதிதாக இருப்பதோடு, பயனர் பகிர்ந்து இருக்கும் விழாவிற்கு நண்பர்கள் விருப்பம் மற்றும் கலந்து கொள்வதற்கான ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo