பேஸ்புக், வாட்ஸ்அப் திடீர் முடக்கம் கடுப்பான மக்கள், பிறகு சரியானது

பேஸ்புக், வாட்ஸ்அப்   திடீர்  முடக்கம் கடுப்பான  மக்கள், பிறகு  சரியானது

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள்  பயன்படுத்தும் வாட்ஸ்அப்  செயலி திடீர்  என முடங்கியது பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப்  போட்டோ,வீடியோ ஆடியோ  என எந்த ஒரு தகவலையும் ஒருவர் மற்றொருவருக்கு பரிமாற்றம் செய்ய முடியாமல் போனது.அதனை தொடர்ந்து  நேற்று மாலையில் இருந்து வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக்  மீடியா சம்பந்தமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. இதனால் பயனாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகும் நிலைஏற்பட்டது.

வாட்ஸ்அப்  யில் முழுமையாக முடக்கம் இல்லை அதாவது அவர்கள் அனுப்பும் டெக்ஸ்ட்  மெசேஜ் போன்றவை நீங்கள் படிக்கலாம், ஆனால்  போட்டோ  அல்லது வீடியோ உங்களுக்கு ரிசீவ் ஆகி இருந்தாலும் அதை டவுன்லோடு செய்ய முடியாமல் போனது.மேலும் புகைப்படம் அது போல தான்  அது புகப்படமும் உங்களுக்கு  ரிசீவ்  ஆகி இருந்தாலும் அது என்னவென்று சரியாக டவுன்லோடு செய்து பார்க்க இயலவில்லை பேஸ்புக் நிறுவனங்களாக செயல்படும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் முற்றிலுமாக தகவல் தொடர்புகள் சிக்கலாகவும், ட்விட்டரில் பலர் தங்களின் கருத்தினை பதிவு செய்துள்ளனர்.

முதலில் நெட்வொர்க் கோளாறு காரணமாக இந்த பிரச்சனை என்று நினைத்தனர். பின்னர் பேஸ்புக்கிலும் புகைப்படங்களை பார்க்க இயலவில்லை. இந்தியா மட்டுமல்லாமல் ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் ஆப்ரிக்கா என அனைத்து நாடுகளிலும் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது..

நேற்றிரவு ஏற்பட்ட இந்த குழப்பத்தால் பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் என பிரபல சோசியல் மீடியாக்களில் முற்றிலுமாக முடங்கின. ஆனால்  நீங்கள் அனுப்பும் டெக்ஸ்ட் மெசேஜை அனுப்பவும் மற்றும் பெறவும் முடியும் அதில்  எந்த சிக்கலும் இல்லை. பேஸ்புக்கிலும் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் “பயனாளிகளின் பிரச்சனைகள் என்னவென்று பார்த்து அதனை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று அறிவித்திருந்தனர்.

இந்த பிரச்சனை ஆனது  நேற்று இரவு தான்  இருந்தது ஆனால்  இன்று காலையில் இருந்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்  போட்டோ அப்லோட் செய்வதில்  இப்பொழுது எந்த பிரச்னையும் இல்லை அதை சரி செய்துவிட்டதாக  பேஸ்புக்  அதன்  அதிகாரபூர்வ ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டுட்டுள்ளது டிய விரைவில் 100% முழுமையான சேவையை நாங்கள் அளிப்போம். சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம்” என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டீவிட் செய்யப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo