WhatsApp யில் விஜயதசமி முன்னிட்டு உங்கள் நண்பருக்கு Gif,ஸ்டிக்கர் மூலம் வாழ்த்து சொல்லுங்க

Updated on 12-Oct-2024

விஜயதசமி என்றும் அழைக்கப்படும் தசரா இந்தியாவின் மிகவும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும், இது தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது. இந்த மங்களகரமான நிகழ்வைக் குறிக்க நாடு முழுவதும் உள்ள மக்கள் தயாராகி வரும் நிலையில், அன்பானவர்களுடன் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வது கொண்டாட்டத்தின் இன்றியமையாத பகுதியாக மாறியுள்ளது. நீங்கள் இதயப்பூர்வமான மெசேஜ்களை அனுப்ப விரும்பினாலும் அல்லது பண்டிகை அதிர்வுகளுடன் உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க மற்றும் GIF, ஸ்டிக்கர் போன்றவற்றை அனுப்பலாம் இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் விஜயை தசமி அன்றே ஆயுத பூஜை வரும் ஆனால் இந்த ஆண்டு ஒரு முன்னதாகவே வந்துள்ளது இருப்பினும் தசமியை கொண்டாடும் விதமாக உங்கள் அன்பானவர்களுக்கு வாழ்த்து அனுப்பலாம்.

விஜயதசமி 2024″:WhatsApp ஸ்டேட்டஸ் எப்படி வைப்பது?

வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு தளங்கள் சிறந்ததாக இருக்கும்.

விஜயதசமி செக்சனை கண்டறியவும்: விஜய தசமிக்கான டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் ஒழுங்கமைக்கின்றன.

போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.

மீடியா டவுன்லோட் : அந்த பைலை சேமிக்க டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பார்மெட் WhatsApp உடன் இணைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Youtube லிருந்து டவுன்லோட் செய்யலாம்.

  • YouTubeக்குச் செல்லவும்: உங்கள் ஸ்மார்ட்போனில் YouTube ஆப்பை திறந்து, விஜயதசமி 2024 வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ” என்று தேடவும்.
  • வீடியோ லிங்க் காப்பி செய்யவும் நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் வீடியோவைக் கண்டறிந்து அதன் லிங்கை காப்பி செய்யவும்
  • YouTube டவுன்லோடரைப் பயன்படுத்தவும்: YouTube லிங்கை பேஸ்ட் செய்வதன் மூலம் வீடியோக்களைப் டவுன்லோட் செய்ய அனுமதிக்கும் வெப்சைட் அல்லது ஆப்பை கண்டறியவும்.

விஜயதசமி முன்னிட்டு WhatsApp GIFs எப்படி அனுப்புவது?

  • வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் GIF ஐ அனுப்ப விரும்பும் காண்டேக்டின் சேட்டை திறக்கவும்.
  • ஈமோஜி பிரிவுக்குச் செல்லவும், இங்கே நீங்கள் GIF விருப்பத்தை நம்பர் இரண்டில் காணலாம்.
  • உங்களுக்குப் பிடித்த GIFஐக் கண்டறிய, சர்ச் பாக்ஸில் சென்று “விஜய தசமி ” என டைப் செய்யவும். சிறந்த GIFகளை நீங்கள் காண்பீர்கள்.
  • அதிலிருந்து எந்த GIFஐயும் தேர்வு செய்து உங்கள் கண்டேக்ட் மற்றும் நீங்க விரும்புவோர்களுக்கு அனுப்பலாம்.
Happy Dussehra 2024 Wishes (image source: freepik.com)

விஜயதசமி 2024 WhatsApp Stickers எப்படி டவுன்லோட் செய்வது?

  • வாட்ஸ்அப்பில் சென்று நீங்கள் ஸ்டிக்கரை அனுப்ப விரும்பும் நவராத்திரி வாழ்த்துக்கு சேட்டை திறந்து, ஈமோஜி பட்டனை கிளிக் செய்யவும்.
  • ஸ்டிக்கர்களை உருவாக்க, நான்காவது ஐகானைத் தேர்ந்தெடுத்து “Create” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இது உங்களை “Create” ஸ்டிக்கர் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும், அங்கு நீங்கள் சமீபத்திய போட்டோக்கள் மற்றும் கேலரி படங்களைக் காண்பீர்கள்.
  • விஜயதசமி வாழ்த்து சொள்ள காண்டேக்டுக்கு உங்கள் விருப்பப்படி எந்தப் படத்தையும் இங்கிருந்து தேர்வு செய்யலாம்.
  • ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் மேலும் ஸ்டிக்கர்கள், படங்கள், ஈமோஜி மற்றும் டெக்ஸ்ட்டை சேர்க்கலாம்.
  • அதன் பிறகு அந்த ஸ்டிக்கரை விஜயதசமி வாழ்த்தை உங்கள் நண்பர் மற்றும் உறவினருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :