ஸ்மார்ட்போனில் உங்களின் பர்சனல் மற்றும் ரகசிய படங்கள் மற்றும் வீடியோக்களை மறைத்து வைக்க சில ஆப் பயன்பாடுகள் வெப்சைட்டில் உள்ளது, அவற்றுள் தகுதியான மற்றும் சிறந்த ஆப் பயன்பாடுகளை தேர்வுசெய்வது மிகவும் நல்லது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு வசதி அதிகமாகவே உள்ளது, இருந்தாலும் தனிப்பட்ட பைல் மற்றும் வீடியோ போன்றவற்றை மறைத்து வைக்க கட்டயாம் சிலருக்கு ஆப் தேவைப்படுகிறது
ஸ்மார்ட்போனை சர்வீஸ் செய்யும் போது தேவையான போட்டோ மற்றும் வீடியோக்களை பாதுகாப்பாக வைப்பது மிகவும் நல்லது, அதன்படி படங்கள் மற்றும், வீடியோக்களை மறைத்துவைக்க கூகுள் பிளே ஸ்டோரில் அதிகமான ஆப் பயன்பாடுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டேப் 1
டயலர் வாலட் (Dialer Vault) எனும் ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யவேண்டும்.
ஸ்டேப் 2
அதன் பிறகு டயலர் வாலட் app உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தபின்பு, அவற்றில் இந்த ப்ராசெஸ் எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. அடுத்து grant permission-என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் 3
மேலும் இவற்றுள் செக்யுரிட்டி கேள்வி இருக்கும், அதற்கு தகுந்தபடி விடை கொடுத்து உள்நுழைய வேண்டும். அதன்பின்பு 4-எண்கள் கொண்ட பின் நம்பரை அவற்றுள் என்ட்டர் செய்ய வேண்டும், இந்த பின் நம்பரை வைத்தே இந்த ப்ராசெஸ் செய்ய முடியும்
ஸ்டேப் 4
அடுத்து டயலர் வாலட் ஆப்யின் முன்பக்கம் புகைப்படம், வீடியோ, ஆடியோ, file போன்றவற்றை மறைத்துவைக்க சில செட்டிங்க்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றை வைத்து உங்களது டாகுமென்ட்கலை மறைத்துவைக்க முடியும்.
ஸ்டேப் 5
டயலர் வாலட் செயலியில் உள்ள செட்டிங்கஸ் பகுதியில் பல்வேறு ஒப்சன்கள் இடம்பெற்றுள்ளது, அவற்றுள் லாக் ஸ்கீரின், hide app i con, break-in-alerts போன்ற பல ஒப்சன்கள் உள்ளது. இந்த ப்ரோசெசரில் கால் அழைப்புகளுக்கு பயன்படும் வீதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.