கூகுள் ப்லே ஸ்டோரில் Cam Scanner அதிரடி நீக்கம், malware இருப்பது கண்டறியப்பட்டது.
லட்சத்திற்க்கு மேலான மக்கள் இந்த Cam Scanner பிளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் செய்யப்படும் செயலியில் ஒன்றாகும் இதனை பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை பிடிஎப் ஆக எளிதாக மாற்றலாம். பெரிய அளவில் பயன்பட்ட இந்தச் செயலி மீது மால்வேர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூகுளுக்கு தெரிவித்தனர்.
சமீபத்தில் சூப்பர் செல்ஃபி, சிஓஎஸ் கேமரா, பாப் கேமரா மற்றும் ஒன் ஸ்ட்ரோக் லைன் பஸில் உள்ளிட்ட 80-க்கும் அதிகமான செயலிகளை கூகுள் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து கேம் ஸ்கேனர் செயலியை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. மால்வேர் தாக்குதல் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே இருப்பதாகவும், IOS வெர்ஷனில் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம் ஸ்கேனர் செயலியில் வணிக வருவாய்க்காக ஏராளமான விளம்பரங்கள் இடம்பெறும் என்றும், இதில் உள்ள போலி விளம்பரங்கள் மூலம் மால்வேர் உருவாகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
இதனை உறுதி செய்த கூகுள் நிறுவனம், இந்த செயலியை உடனே நீக்கும்படி பயனாளர்களையும் அறிவுறுத்தியது. பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தும் கூகுள், பாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட செயலிகளை அடுத்தடுத்து நீக்கி வருகிறது.
இதன் மூலம் பயனர்களின் வங்கிக் அக்கவுண்ட் தகவல்கள் மற்றும் தனிப்பட்ட ரகசியங்கள் ஹேக்கர்களால் திருடப்படலாம் எனவும் தெரிய வந்துள்ளது. ஓசிஆர் எனப்படும் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் மூலம் ஸ்மார்ட் போன் வழியாக ஊடுருவி தகவல்கள் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile