ஆப்பிள் மேப் ஆப்யில் நேவிகேஷன் மற்றும் கார் ப்ரி புக்கிங் வசதி அறிமுகம்…!

Updated on 14-Jan-2019
HIGHLIGHTS

இந்தியாவில் ஆப்பிள் மேப்ஸ் ஆப்யில் நேவிகேஷன் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் பயணங்களில் நடக்கும் போதோ அல்லது கார்களில் பயணிக்கும் போது வழி சொல்கிறது.

இந்தியாவில் ஆப்பிள் மேப்ஸ் ஆப்யில் நேவிகேஷன் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் பயணங்களில் நடக்கும் போதோ அல்லது கார்களில் பயணிக்கும் போது வழி சொல்கிறது.

புதிதாக நேவிகேஷன் வசதி தவிர உபெர் மற்றும் ஒலா போன்றவற்றில் இருந்து கார் முன்பதிவு செய்யும் வசதியும் வழங்குகிறது. இதனை இயக்க மேப்ஸ் ஆப்யின் ரைடு ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும். இருப்பினுனும் இதில், பொது போக்குவரத்து சார்ந்த விவரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியை தெரிவிப்பதோடு, குறிப்பிட்ட முகவரியில் பணி நடைபெறும் நேரம், சரியான முகவரி, தொடர்பு விவரங்கள் போன்ற பல்வேறு தகவல்களை வழங்குகிறது. 

இவை தவிர ஆப்பிள் மேப்ஸ் செயலியில் பொது போக்குவரத்து விவரங்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளின் முழுமையான காட்சி போன்ற வசதிகள் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன.

அதிகளவு விவரங்களை சேகரித்து சரியான தகவல்களை வழங்கினாலும், கூகுள் மேப்ஸ் சேவையுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் மேப்ஸ் சற்று பின்தங்கியிருக்கிறது. ஏற்கனவே தாமதமாகி இருந்த போதும் மாற்றம் செய்ய ஆப்பிள் முன்வந்திருப்பதே ஆப்பிள் ப்ரியர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :