Covid-19 தகவலை வழங்கும் Aarogya Setu ஆப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டது.

Updated on 04-May-2020
HIGHLIGHTS

ஆரோக்யசேது செயலியை பயன்படுத்துவது நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படுகிறது

நாட்டில் பணியாற்றும் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் ஆரோக்யசேது செயலியை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளை குறிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போரும் ஆரோக்யசேது செயலியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த செயலி ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். மூலம் உருவாக்கப்பட்ட சமூக வரைபடம் கொண்டு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டவருடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதை கண்டறியும்.

ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஆரோக்யசேது செயலியை பயன்படுத்தி மக்கள் தங்கள் பகுதியில் கொரோனா தொற்று உள்ள நபர்கள், அருகில் கொரோனா தொற்று உள்ள இடங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆரோக்யசேது செயலியை பயன்படுத்துவது நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படுகிறது. பணியாளர்கள் இந்த செயலியை பயன்படுத்துகிறார்களா என்பதை அந்தந்த நிறுவன தலைமை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. 

இதுதவிர ஆரோக்யசேது செயலியை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தடை செய்யப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிப்போர் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. 

Aarogya Setu

செயலியை பயன்படுத்த இவற்றை உறுதிப்படுத்த வேண்டும்:  

– செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டதும் சாதனத்தின் லொகேஷன் ஆன் செய்யப்படும்.

– பின் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் அனுப்பப்படும், இதை பதிவிட்டதும் பயன்படுத்த துவங்கலாம்.

– செயலியில் கேட்கப்படும் ஆப்ஷன்களின் படி பாலினத்தை குறிப்பிட வேண்டும்.

– இனி உங்களின் முழு பெயர், வயது, செய்யும் தொழில் உள்ளிட்டவற்றுக்கு பதில் அளிக்க வேண்டும்.

– அடுத்து கடந்த 30 நாட்களில் உங்களின் வெளிநாட்டு பயண விவரங்கள் கேட்கப்படும். இவற்றுக்கு சரியான பதில்கள் அளிக்க வேண்டும்.

ஆரோக்யசேது செயலியை பயன்படுத்துவது எப்படி?

– முதலில் ஆரோக்யசேது செயலியை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

– பின் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்ட சாதனத்தில் ப்ளூடூத் மற்றும் லொகோஷனை ஆன் செய்ய வேண்டும். இனி லொகோஷன் ஷேரிங் ஆப்ஷனை 'ஆல்வேஸ்' என மாற்ற வேண்டும்.

– இதுதவிர கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் யாரேனும் உங்கள் அருகில் வந்தால், இந்த செயலி எச்சரிக்கை விடுக்கும். இத்துடன் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் ஒருவர் எவ்வாறு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விவரங்களை வழங்குகிறது.

– ஆரோக்யசேது செயலியில் சுய-சோதனை செய்வதற்கான ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பயனரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். இவ்வாறு பயனர் வழங்கும் பதில்களில் கொரோனா அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் இந்த விவரம் அரசு சர்வெர்களுக்கு அனுப்பப்பட்டு விடும். பின் அரசு சார்பில் இந்த விவரங்களை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :