உங்க ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும் மற்றும் எது செய்ய கூடாது ?

உங்க  ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால்  என்ன செய்ய வேண்டும் மற்றும் எது செய்ய கூடாது ?

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பல வழிமுறைகளில் மிக எளிமையாக சரி செய்ய முடியும், குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் அதிக டெக்னாலஜி  வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில ஸ்மார்ட்போன் மாடல்கல் தண்ணீர் மற்றும் தூசி மூலமாக  ப்ரொடெக்சன்  போன்றவை வருகிறது என்பது குறிப்பிட தக்கது 

பல்வேறு மக்கள் தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போனை சரிசெய்ய தேவையில்லாத வழிமுறைகளை பின்பற்றுகின்றனர், சில வழிமுறைகள் மூலம் எளிமையாக சரிசெய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஸ்டெப்  1

நமக்கு  தெரியாமலே  உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுக்க வேண்டும். 

ஸ்டெப் 2 

அடுத்து தண்ணீரிலிருந்து எடுத்த ஸ்மார்ட்போனை ஆன் செய்யாமல், முதலில் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்கு மேல் உங்கள் ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப்-ஆகவில்லை என்றால் பவர் பட்டனை அழுத்திப் பிடித்தால் போதும் உடனே சுவிட்ச் ஆப்-ஆகிவிடும்.

ஸ்டேப் 3

அதன்பின்பு குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது.

ஸ்டேப்  4

ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப் நிலையில் இருக்கும் போது சார்ஜ் செய்தல் கூடாது, ஒருவேலை நீங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.

ஸ்டேப் 5

சிலர் ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க மைக்ரோவேவ் ஓவன் சாதனம், அல்லது நெருப்பு போன்றவற்றை பயன்படுத்துவார்கள், அவ்வாறு செய்யக்கூடாது இதுவும் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.

ஸ்டேப் 6

அடுத்து ஸ்மார்ட்போனில் இருக்கும் எஸ்டி கார்டு, பேட்டரி, சிம் போன்றவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 7

ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க முதலில் சூரியஒளியைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது, சூரியஒளி வெப்பத்தால் உடனே ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை உலர்த்த முடியும். இரவு நேரமாக இருந்தால் மின்விளக்கு வெளிச்சத்தில் வைப்பது மிகவும் நல்லது.

ஸ்டேப் 8

ஸ்மார்ட்போனின் மேல் சிறிது அரிசி போட்டுவைத்தால் சரியாகும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டேப் 9

உங்கள் ஸ்மார்ட்போனை ஆன் செய்ய முடியாத நிலைமையில் நீங்கள் சர்வீஸ் சென்ட்டர் எடுத்து சென்று சரிசெய்வது மிகவும் நல்லது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo