நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது பெரும் சர்ச்சைக்குரிய பிரச்சனையாக உள்ளது, என்னதான் பெண்கள் அனைத்து துறையிலும் பெண்கள் முதல் இடத்தில் இருந்தாலும் பெண்களுக்கு பாதுகாப்பு என்று வரும்பொழுது புதிய புதிய சிக்கல்களும் பிரச்சனைகளும் வந்து கொண்டே தான் இருக்கிறது.சமிப காலத்தில் கொலை,கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் கொடுமை, ஈவ்-டிஸிங், கடத்தல் போன்ற பல வன்முறைகள் நாட்டில் நடக்கின்றன. எனவே இங்கு பெண்களை பாதுகாக்கும் வகையில் சில ஆப்கள் இருக்கிறது அவை என்ன செய்யும் என்பதை நாம் இங்கு பார்க்கலாம்.
1 SOS- பாதுகாப்பாக இருங்கள் : இந்த ஆப் பயன்படுத்தும்பொழுது நீங்கள் எந்த பாஸ்வர்ட் போட்டு திறக்க வேண்டும் என்ற அவசியமில்லை சற்று உங்களின் போனை இந்த ஆப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் போனில் ஒரு முறை குலுக்கினாள் போதும் நீங்கள் இருக்கும் இடத்தை சரியாக அவசர தகவலற்கு எச்சரிக்கை கொடுக்கும்.
2 VITHU- இது மிகவும் சுலபமான பயன்பாடு. ஆபத்தில் இருக்கும் நேரம் உங்கள் போனின் பவர் பட்டனை இரு முறை அழுதவும். அப்போது நீங்கள் ஆபத்தில் இருப்பதை தெரிந்து அவசர தகவலை விண்ணப்பம் எச்சரிக்கையாளருக்கு அனுப்பப்படும்.
3 I AM SHAKTI- இது நீங்கள் மிகவும் எளிதான பயன்படுத்தப்படும் ஆப் ஆகும். போனில் பவர் பட்டனை 2 வினாடியில் 5 முறை அழுத்த வேண்டும். பயன்பாட்டில் முன்பே நியமிக்க பட்ட தொடர்புகளுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்ப படுகிறது.
4 I GO SAFELY- இந்த ஆப் ஹெட் போன் உடன் இணைக்கபட்டு செயல்படுகிறது. பெண்கள் பயணிக்கும் பொழுது ஹெட் போன் உபயோகிப்பார்கள். ஆப் செயல்படுத்திய பின் ஹெட்போன் மூலம் எச்சரிக்கை விண்ணப்பதை அனுப்பலாம்.
5 NIRBHAYA – இந்த ஆப் செயல்படுத்தி,பவர் பட்டனை அழுதினால் விண்ணப்பம் ஏற்க படும். செய்தி மூலம் அல்லது கால் மூலம் பதிவு அனுப்பலாம். இது ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் இருக்கும் இடத்தின் தகவல் அனுப்புகிறது.