உங்களின் ஆதார் கார்ட் தொலைந்தால் Duplicate கார்ட் எப்படி பெறுவது ?

உங்களின் ஆதார் கார்ட்  தொலைந்தால் Duplicate கார்ட் எப்படி பெறுவது ?
HIGHLIGHTS

உங்களின் ஆதார் கார்டை தொலைத்து விட்டிர்களா இதோ கவலைய விடுங்க கீழே குறிப்பிட்டுள்ள சில வழிமுறையை பின் தொடர்ந்தால் போதும் நீங்கள் எளிதாக உங்களின் ஆதார் கார்டை ரீப்ரின்ட் செய்து கொள்ள முடியும்.

UIDAI வெப்சைட்டில் சென்று திரும்பி ரி பிரிண்ட் செய்வதே ஒரே ஒரு வழியாக அமையும்.

ஆதார் கார்ட் நம்பர் அல்லது விரஜுவல் ஐடென்டிபிகேஷன் நம்பர் (Virtual Identification Numbe)r(VID) ரி பிரிண்ட் செய்ய கட்டாயமாக தேவைப்படும்

ஆதார் கார்ட் மிக முக்கிய ஆவணமாக இந்தியாவில் கருதப்படுகிறத, எந்த ஒரு இடத்திலும்  அடையாள சான்றுதலுக்கு  இந்த ஆதார்  தேவைப்படுகிறது. இதனுடன்  இவ்வளவு  முக்கியமாக இருக்கும் இந்த ஆதார்  கார்ட்  தொலைந்து  போய் விடுகிறது மற்றும் மேலும் சிலருக்கு  வைத்த இடம் தெரியாமல்  மறந்து போவதும் உண்டு இதனுடன்  இதில்  ஒரே ஒரு ஆப்சன் என்றால் UIDAI  வெப்சைட்டில்  சென்று  திரும்பி  ரி பிரிண்ட்  செய்வதே  ஒரே ஒரு  வழியாக அமையும். 

சமீபத்தில் UIDAI  அறிமுகப்படுத்தியது  ஆதார் கார்டை  தொலைத்து விடும் மக்களுக்கு  அதை திரும்பி ரி பிரிண்ட்  செய்து கொள்ள  ரூ50 செலுத்தி  திரும்பி  ரீப்ரின்ட்  செய்து கொள்ளலாம்  இதனுடன் இதில் GST ஸ்பீட் போஸ்ட்  சேர்த்து  இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டை உங்களின் ரெஜிஸ்டர்  முகவரிக்கு 5 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படுகிறது.

எனவே  நீங்களும் உங்களின் ஆதார் கார்டை  தொலைத்து விட்டிர்களா இதோ கவலைய விடுங்க  கீழே குறிப்பிட்டுள்ள  சில  வழிமுறையை பின் தொடர்ந்தால் போதும் நீங்கள்  எளிதாக  உங்களின் ஆதார் கார்டை ரீப்ரின்ட்  செய்து கொள்ள முடியும்.

இதனுடன்  இதில்  முதல்  விஷயம் 

நீங்கள் முதலில்  உங்களின் ஆதார் கார்ட் நம்பர் அல்லது விரஜுவல்  ஐடென்டிபிகேஷன்  நம்பர் (Virtual Identification Numbe)r(VID)  ரி பிரிண்ட்  செய்ய கட்டாயமாக தேவைப்படும். இதனுடன் இதில் ஆதார் கார்டுடன்  லிங்க் செய்த  மொபைல்  நம்பர் தெரிந்து  வைத்து கொள்வதும் மிக அவசியமாகும்  ஏன்  என்றால்  உங்களின் மொபைல்  நம்பருக்கு OTP   நம்பர் வரும்  வெரிபிகேஷன்  செய்வதற்கு.

இதனுடன் நீங்கள் இங்கு  உங்களின்  மொபைல்  நம்பர் ரெஜிஸ்டர் செய்யவில்லை அல்லது  எந்த மொபைல்  நம்பர்  ரெஜிஸ்டர்  கொடுத்தோம்  என்று தெரியவில்லை  என்றாழும் நீங்கள்  ரீப்ரின்ட்  செய்து கொள்ளலாம் அது எப்படி வாருங்கள் பார்ப்போம் 

1 உங்களது PC யில் www.uidai.gov.in  திறக்கவும்.

2  ஆதார்  சர்விஸ்  பகுதியில் சென்று (Aadhar service' section ) மற்றும் ஆதார்  ரீப்ரின்ட் ஆப்ஷனை  க்ளிக் செய்ய வேண்டும்.

3 அதன் பிறகு உங்களது PC யில் புதிய பக்கம் திறக்கும், அங்கு  உங்களின் 12 டிஜிட்  ஆதார்  நம்பர் அல்லது 16 டிஜிட்  உள்ள  வர்ஜுவல் ஐடென்டிபிகேஷன்  நம்பர் Virtual Identification Number  மற்றும்  செக்யூரிட்டி  கோட்  (captcha)  எனத் செய்ய வேண்டும். 

4 உங்களின்  மொபைல்  நம்பர்  ரெஜிஸ்டராக  இருந்தால் நீங்கள்  send OTP  என்பதில் க்ளிக் செய்யுங்கள், உங்களின்  மொபைல் நம்பர் ரெஜிஸ்ட்ராக  இல்லை என்றால் நீங்கள்  கீழே கொடுக்கப்பட்டுள்ள  டிக் பாக்சில்  க்ளிக் செய்யவும் மொபைல்  நம்பர் ரெஜிஸ்டர்  இல்லை  என்பதை க்ளிக் செய்து proceed  பட்டன் க்ளிக் செய்யவும்.

5 இப்பொழுது உங்களுக்கு போனுக்கு  வந்த OTP  போடா வேண்டும் 

6 உங்கள்  தகவல் பக்கம் திறக்கும் இப்பொழுது உங்கள் தகவல் சரியானதாக இருந்தால் Make Payment' ஒப்சஷனில்  க்ளிக் செய்ய வேண்டும்.

7  உங்களுக்கு எந்த பேமண்ட்  மோட் வேண்டுமோ அதை  செலக்ட் கொள்ளுங்கள் பிறகு  பணம் கட்டலாம் 

8 நீங்கள்  பேமண்ட்  செய்து முடித்ததும் உங்களுக்கு உறுதிப்படுத்தல் (confirmation message ) உங்களது ஸ்க்ரீனில் வரும் மற்றும் உங்களின்  போன்  நம்பரில்  ரெபரென்ஸ் நம்பர் வரும் அதை  SRN நம்பர் என அழைப்பார்கள்  அதை  வைத்து நீங்கள்  ட்ராக்  செய்ய உதவும்.

குறிப்பு :- உங்களின் மொபைல்  நம்பர் ரெஜிஸ்டார்க இல்லை  என்றல் செக் பாக்சில்  க்ளிக் செய்தால் போதும் உங்கள் கையில் எந்த போன்  வைத்திருக்கிர்களோ அந்த நம்பருக்கு  OTP  வரும். 

இப்பொழுது ஆதார் கார்ட்  எப்போ வரும் என ட்ராக் எப்படி செய்வது 

1 www.resident.uidai.gov.in சென்று  ஆதார் ரீப்ரின்ட்  க்ளிக் செய்யுங்கள் 

2 அதன் பிறகு உங்கள் போனுக்கு  வந்த SRN  நம்பர் என்டர் செய்யுங்கள் மற்றும் அதன் பிறகு 12 டிஜிட் ஆதார்  நம்பரை  என்டர்  செய்யவும் 

3 பிறகு  கீழே கொடுக்கப்பட்டுள்ள  செக்யூரிட்டி  கோட்  நிரப்பி  submit  பட்டனில்  க்ளிக் செய்ததும்  முழு தகவலும் தெரிந்து விடும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo