உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வெப்கேமராவை CCTV யாக மாற்ற முடியும், வெப்சைட்டில் பல்வேறு ப்ரோசாஸ் உள்ளது, அவற்றின் உதவியுடன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வெப்கேமராவை மிக அருமையான முறையில் CCTV யாக மாற்ற முடியும்.
லைவ் விடியோக்களை மிக அருமையாக பார்க்க உதவி செய்கிறது இந்த வெப்கேமரா, இந்தப் பயன்பாடு பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும். மேலும் PC வெப்கேமை, CCTV கேமராவாக மாற்றும் வழிமுறையை பார்ப்போம்.
ஸ்டேப் -1
முதலில் Yawcam டவுன்லோட் செய்ய வேண்டும், Yawcam என்பது ஒரு இலவச ஜாவா வெப்கேம் பயன்பாடாகும். மேலும் இணையதளம் மூலம் லைவ் வீடியோவை எளிமையாக பார்க்க முடியும். மேலும் வெப் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது என உறுதி
ஸ்டேப்-2:
Yawcam-வை இன்ஸ்டால் செய்ய வேண்டும், அதன்பின்பு வேப்கேம் இயக்க கம்ப்யூட்டர் டிரைவர்கள் செலக்ட் செய்து அவற்றை இயக்க வேண்டும். பின்பு வேப்கேம் சரியாக பொருத்தியிருப்பதை பார்க்க வேண்டும்.
ஸ்டேப்-3:
அடுத்து Yawcam-ஆப் பயன்பாட்டில் உள்ள செட்டங்கிஸ் கிளிக் செய்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் கேமராவைத் செலக்ட் செய்யவும். அதன் பின்பு வீடியோவிற்கென தனி பீரிவியு ஸ்க்ரீனில் காண முடியும்
ஸ்டேப்-4:
பின்னர் வெப்கேமராவில் உள்ள மெனுவில் கிளிக் செய்து மோஷன் கண்டறிதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வாறு செய்யும்போது உங்கள் கேமராவில் உள்ள மோஷன்களை காணமுடியும்.
ஸ்டேப்-5:
அதன்பின்பு வெப்கேமராவில் உள்ள செட்டங்கிஸ் கிளிக் செய்து Action tab-இல் உங்கள் E-MAIL முகவரியை கொடுக்கவும், நீங்கள் E-MAIL எச்சரிக்கைகள் மூலம் தொலைவில் இருக்கும்போது கூட உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை எளிதாக கண்காணிக்க முடியும்.