ஆதார் உடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டுவிட்டதா.? சரி பார்ப்பது எப்படி.?

Updated on 11-Jan-2019
HIGHLIGHTS

ஆதார் நம்பரை இப்பொழுது அனைத்துலும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

ஆதார் கார்ட்  என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். இந்த ஆதார் கார்ட்  பொறுத்தவரை சமையல் எரிவாயு இணைப்பு முதல் மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் நம்பரை இப்பொழுது அனைத்துலும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

மத்திய அரசின் சிறப்பு திட்டமான ஆதார் கார்ட் கட்டாயம் ஆக்கப்பட்ட பின்னர், நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் தங்களைப் பற்றிய முழுவிபரங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் அனைத்து இடங்களிலும் இப்போது ஆதார் கண்டிப்பாக தேவைப்படுகிறது, ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை சரிபார்க்க சில வழிமுறைகள் உள்ளது. 

வழிமுறை-1: முதலில் UIDAI-என்ற வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.

வழிமுறை-2: அதன்பின்பு UIDAI–வெப்சைட்டில் வலது பக்கத்தில் "Verify Email/Mobile Number" -என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.

வழிமுறை-3: அடுத்த பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஆதார் எண், மொபைல் எண், மற்றும் பாதுகாப்பு குறியீடு போன்ற தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும்.

வழிமுறை-4:

பின்னர் உடனடி ஒருமுறை OTP  உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும், அதன்பின் உங்களுக்கு வந்த OTP  அந்தபக்கத்தில் என்டர்  செய்யவும் 

வழிமுறை-5:

அதன்பின்பு மொபைல் எண் எங்கள் ரெகார்ட் உடன் மேட்ச்  ஆகிறது என்ற தகவல் உங்களுக்கு கிடைக்கும்..

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :