Gmail ஷெட்யுள் செய்ய வேண்டுமா ? அப்போ இதை செய்யுங்க தானாகவே ஈமெயில் போகிடும்

Updated on 03-Jan-2024

நீங்கள் கூகுள் Gmail பயன்படுத்துகிரிர்கள் என்றால், இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்ன தான் பல அம்சம் இருந்தாலும் இந்த அம்சம் மிகவும் முக்கியமாக தேவைப்படும் மேலும் இப்படி ஒரு அம்சம் இருப்பது நம்முள் பலருக்கு தெரியாது. அப்படி என்ன அம்சம் என்று தோன்றும் வாங்க பாக்கலாம்.

கூகிள் தனது ஈமெயில் சேவையான ஜிமெயிலில் ஈமெயில் ஷேட்யுள் அம்சத்தை ஏப்ரல் 2019 யில் அறிமுகப்படுத்தியது, ஆனால் பலர் அதைப் பற்றி இன்னும் அறிந்திருக்கவில்லை. ஈமெயில் ஷேட்யுள் அம்சத்தைப் பயன்படுத்தி, உங்கள் வசதிக்கேற்ப குறிப்பிட்ட நேரத்தில் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பலாம். ஈமெயில் ஷேட்யுள் அம்சம் மொபைல் ஆப் மற்றும் டெஸ்க்டாப் இரண்டிலும் கிடைக்கிறது. மொபைல் ஆப் மற்றும் டெஸ்க்டாப்பில் ஈமெயிலை எவ்வாறு ஷேட்யுள் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: Poco M6 Pro 4G ஜனவரி 11 அறிமுகமாகும், விலை சிறப்பம்சம் தெருஞ்சிகொங்க

டெஸ்க்டாப் பிரவுசரில் Gmail ஈமெயில் எப்படி ஷெட்யுள் செய்வது?

  • முதலில் gmail.com யில் சென்று அக்கவுண்டை லோகின் செய்யவும்.
  • இப்போது, ​​நீங்கள் ஒரு மெயில் அனுப்புவது போல், அனுப்ப வேண்டிய நபரின் ஐடியுடன் ஈமெயில் உருவாக்கி, அதை டிராப்ட்டில் சேமிக்கவும்.
  • இப்போது அனுப்பு என்பதைக் கிளிக் செய்வதற்குப் பதிலாக, கீழே உள்ள கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்யவும்.
  • இப்பொழுது Schedule send யில் க்ளிக் செய்யவும்.
  • இதற்குப் பிறகு நீங்கள் தேதி மற்றும் நேரம் விருப்பத்தைப் பெறுவீர்கள். இப்போது நேரம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுத்த பிறகு, ஈமெயில் ஷேட்யுள் செய்யப்பட நேரத்தில் தானாகவே அனுப்பப்படும்.

மொபைல் ஆப் யில் ஈமெயில் எப்படி ஷேட்யுள் செய்வது?

  • உங்களின் Android அல்லது IOS ஆப் யில் திறக்கவும்
  • இப்போது ஈமெயில் ஐடியுடன் கம்போஸ் ஈமெயில் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு, மேல் வலது பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகள் மெனுவைக் கிளிக் செய்து, Schedule send என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இப்பொழுது நேரம் மற்றும் தேதியை செட் செய்யாவும் பிறகு இப்பொழுது ஷேட்யுள் செய்தால் ஷேட்யுள் ஆகிவிடும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :