உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் டெலிட் ஆன தகவலை திரும்ப பெறுவது எப்படி?

Updated on 10-Apr-2019

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பயன்படுத்துவோருக்கு மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக தகவல்களை பாதுகாப்பது தான் இருக்கின்றது. போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் மிகமுக்கிய டாக்குமெண்ட்கள் என தகவல்களை பத்திரமாக வைத்துக் கொள்வது பலருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.

இருப்பினும் , கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்களில் இருக்கும் தகவல்கள் பலமுறை டெலிட் ஆவதும் மற்றும் ஒரு சில முறை அவற்றை தெரியாமல் டெலிட் ஆவது போன்ற நம்மில் பலர் அவ்வப்போது செய்த செயல்தான். பலமுறை நம்மை அறியாமல் தகவல்கள் டெலிட் ஆகும் நிலையில், சில சமயங்களில் ஹார்டு டிரைவ் கிராஷ் ஆவதோ அல்லது இயங்குதளம் முழுமையாக கிராஷ் ஆகி தகவல்கள் மாயமாகிடும்.

இப்படி நடக்கும்போது அவற்றை மீட்க பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இவ்வாறு தகவல்களை மீட்கும் முன் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியதை பற்றி பார்ப்போம்..!

 அழிந்த தகவல்கள் அனைத்தையும் மீட்க முடியாது என்றாலும், ஒருசிலவற்றையை திரும்ப பெற முடியும்.

– சமீபத்தில் அழிந்து போன தகவல்களை மிக எளிமையாகவும், இலவசமாகவும் மீட்க முடியும். இவை ஹார்டு டிரைவின் அழிக்கப்பட்ட தகவல்கள் ஃபோல்டரில் புதிதாக இருக்கும் என்பதால் இவ்வாறு செய்ய முடியும்.

– மேலும் நீங்கள் தவறுதலாக டெலிட் அல்லது டெலிட் ஆன தகவல்களின் ஃபைல் எக்ஸ்டென்ஷன் அறிந்திருந்தால் அவற்றை மிகவும் எளிமையாக திரும்ப பெற முடியும்.

பெரும்பாலும் எக்ஸ்டென்ஷன்கள், புகைப்படங்களுக்கு: .jpg, .png, .CR2., gif

வீடியோக்களுக்கு: .mp4, .3gp, .wmv, .mkv

டாக்குமெண்ட்கள்: .doc, .docx, .ppt, .pptx, .xls, .xlxs, .psd

ஆடியோ டேட்டாக்கள் : mp3, .m4a, .wav, .wma, .flacc

– இதேபோன்று டெலிட் ஆன  தகவல்கள் இருந்த லொகேஷனை அறிந்திருந்தால் மிக வேகமாக அவற்றை திரும்ப பெற முடியும்.

கம்புயூட்டர், லேப்டாப்களில் அழிந்த தகவல்களை மீட்பது எப்படி?

மேலே குறிப்பிட்டப்படி இருந்தால் நீங்கள் இந்த வழிமுறையை பின்பற்றலாம் 

ஸ்டேப் 1: விண்டோஸ் பில்ட்-இன் அம்சம்

விண்டோஸ் பிளாட்போர்மில் இருக்கும் பில்ட்-இன் அம்சம் ரீஸ்டோர் தி ப்ரீவியஸ் வெர்ஷன் (Restore the previous version) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் குறிப்பிட்ட ஃபோல்டர் அல்லது டிரைவ்களில் ஸ்கேன் செய்து சமீபத்தில் அப்டேட் செய்யப்பட மாற்றங்களை கண்டறிந்து அவற்றை ரீஸ்டோர் செய்யும்.

இந்த அம்சம் மூலம் தகவல்களை மீட்க என்ன செய்ய வேண்டும்?

1 – கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் பட்டன் கொண்டு This PC ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

2 – அழிந்து போன டேட்டாக்களை இருந்த ஃபோல்டருக்கு செல்ல வேண்டும்.

3 – ஃபோல்டரில் ரைட் க்ளிக் செய்து Restore previous version ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

4 – இனி லிஸ்டில்  உள்ள ஃபைல் வெர்ஷன்கள் மற்றும் ஃபோல்டர்கள் காணப்படும்.

5 – இதில் வெர்ஷனை க்ளிக் செய்து Restore பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்  2: மூன்றாம் தரப்பு சொப்ட்வர் பயன்படுத்துவது.
முதல் வழிமுறை வேலை செய்யாத நிலையில், easeUS partition, Recuva, Rescue Pro போன்ற மென்பொருள்களில் ஒன்றை கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்து முயற்சிக்கலாம்.

கம்ப்யூட்டர் , லேப்டாப்களில் டெலிட் ஆகிய தகவல்களை மீட்பது எப்படி?
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மென்பொருள்களில் ஒன்றை இன்ஸ்டால் செய்து செய்து தொடர வேண்டும். இங்கு டிரைவ் அல்லது ஃபோல்டரை தேர்வு செய்து ரிக்கவர் (Recover ) மற்றும் ஸ்கேன் (Scan) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இருப்பினும் , ஃபைல் ஃபார்மேட்-ஐ செலக்ட் செய்யாமல் ஸ்கேன் பட்டனை க்ளிக் செய்யும் பட்சத்தில் குறிப்பிட்ட டிரைவ் அல்லது ஃபோல்டரில் உள்ள அனைத்து ஃபார்மேட் டேட்டாக்களையும் ஸ்கேன் செய்யும்.

சொப்ட்வர் டிரைவ் அல்லது ஃபோல்டரை ஸ்கேன் செய்து முடித்ததும், டேட்டாக்களை கம்ப்யூட்டரில் சேமித்து கொள்ளலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :