நாம் இந்திய குடிமகன் என்பதற்கான ஒரு அடையாளம் நம்ம வோட்டர் id கார்ட் தன் அதில் நம் நாட்டை ஆழ போகும் ஒரு ஜனாதிபதி மந்திரி PM , Mp நாம் தேர்ந்தெடுக்க முடியும். அந்த வகையில் பார்த்தல் இந்த வோட்டர் id கார்ட் நமக்கு மிகவும் பயன் படுகிறது , அதை ஒவ்வொருவருக்கும் அவர்களின் முகம் பெயர் அடையாளத்துடன் இது வழங்கப்படுகிறது.
வாக்காளர் அட்டைக்கு நமது பெயரை புதியதாக சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, பெயர் திருத்தம் செய்ய, முகவரி திருத்தம் செய்ய என ஆன்லைனில் வசதி செய்து கொடுத்துள்ளார்கள். அதற்கான இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். https://www.elections.tn.gov.in/VoterServices.aspx இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கு எது தேவையானதோ அதை கிளிக் செய்யவும்.
புதியதாக வாக்காளர் பெயர் சேர்க்க register as voter என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் பிறந்த இடம், முகவரி என அனைத்தையும் தெரிவிக்கவும். நீங்கள் தட்டச்சு செய்ய ஏதுவாக நேரடி கீபோர்ட் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் நீங்கள் எளிதில் தமிழில் தட்டச்சு செய்துகொள்ளலாம்.
அடுத்து உங்கள் புகைப்படத்தினை ஸ்கேன்செய்து அதன் அளவானது 350 கே.பி.க்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை அப்லோடு செய்யுங்கள். உங்கள் போன் எண் மற்றும இ-மெயில் முகவரியை கொடுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அவர்களது பெயரையும் உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவு முறையையும், அவர்கள் அட்டை எண்ணிணையும் குறிப்பிடவும்.
அனைத்து விவரங்களும் பதிந்த பின்னர் இதில் உள்ள வெரிபிகேஷன் கோடினை தட்டச்சு செய்து விண்ணப்பத்தினை சமர்ப்பணம் செய்யுங்கள். சில நாட்களில் உங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை உங்களை வந்து அடையும்.