Instant Loan ஆப் மோசடி இந்தியாவில் மிக வேகமாக இயங்குகிறது.
ஒவ்வொரு நாளும் மக்கள் இன்ஸ்டன்ட் லோன் ஆப்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த இன்ஸ்டன்ட் மோசடி ஆப்யிலிருந்து எப்படி தப்பிப்பது என்று பார்க்கலாம்.
Instant Loan ஆப் மோசடி இந்தியாவில் மிக வேகமாக இயங்குகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் இன்ஸ்டன்ட் லோன் ஆப்களால் பாதிக்கப்படுகின்றனர். இன்ஸ்டன்ட் லோன் ஆப் யின் வெப்பில் விழுந்து பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த லோன் ஆப்களின் விளம்பரங்கள் பேஸ்புக் போன்ற சோசியல் மீடியா தளங்களில் விரிவாக வழங்கப்படுகின்றன. லோன் ஆப்கள் தொடர்பாக அரசாங்கம் பல சட்டங்களை இயற்றியுள்ளது, ஆனால் எதுவும் பயனுள்ளதாக இல்லை.இன்று இந்த இன்ஸ்டன்ட் மோசடி ஆப்யிலிருந்து எப்படி தப்பிப்பது என்று பார்க்கலாம்.
Instant Loan ஆப்யிளிருந்து லோன் வாங்குவது நமக்கு எவ்வாறு ஆபத்தை தருகிறது ?
முதலில், இந்த ஆப்ஸிலிருந்து லோன் பெறுவது ஏன் ஆபத்தானது என்பதை அறிந்து கொள்வது அவசியம். முதல் விஷயம் என்னவென்றால், இந்த ஆப்கள் அதிக வட்டி வசூலிக்கின்றன. இது தவிர, கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், அவர்கள் தகாத வார்த்தைகளால் கூட பேசுகிறார்கள். இதுதவிர, உங்களின் தனிப்பட்ட போட்டோக்களை மீடியா வலைதளங்களில் ஷேர் செய்து விடுவதாக மிரட்டுகின்றனர்.
ஆப்பில் கடன் வாங்கும்போது இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியால் (RBI )அங்கீகரிக்கப்பட்ட ஆப்களை மட்டும் பதிவிறக்கவும்.
எந்தவொரு செயலியிலும் கடன் வாங்குவதற்கு முன், அதைப் பற்றி முடிந்தவரை தகவல்களைச் சேகரிக்கவும்.
ஆப் யின் பேக்ரவுண்ட் அதன் ஹிஸ்டரி போன்றவற்றைச் சரிபார்க்கவும்.
KYCக்கான டேட்டாவை அறியப்படாத எந்த ஆப்ஸுடனும் ஷேர் செய்ய வேண்டாம்.
எந்த விதமான மோசடி குறித்தும் sachet.rbi.org.in ஐப் பார்வையிடுவதன் மூலம் புகார் செய்யலாம்.
RBI லேண்டிங் பிளாட்பாரம் பேங்க் அல்லது NBFC(s) பெயரை டிஜிட்டல் லோன் வழங்கும் தளத்தில் கட்டாயப்படுத்தப்படுகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.