MS வார்டு எப்படி நீங்கள் உங்கள் டாக்குமெண்டை யாரும் பார்க்காத அளவுக்கு எப்படி பாதுகாப்பது…!

Updated on 02-Jan-2019
HIGHLIGHTS

ஆபிசில் நீங்கள் முக்கியமாக ஏதாவது பதிவு செய்து வைத்து இருப்பீர்கள் இதனை மற்றவர் யாரும் மாற்றாமல் இருக்க வேண்டும்

இப்போதெல்லாம் அனைவரும் மைக்ரோசாப்ட்  வார்டு பயன் படுத்துகிறார்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதை மிகவும் முக்கியமாக தேவை படுகிறது, அது போல் உங்களின் வார்டு டக்க்யுமெண்ட்களில் எழுதப்பட்டிருப்பது  மற்றவர்களுக்கு தெரியாமல் எப்படி பாதுகாப்பது உதாரணத்துக்கு உங்கள் ஆபிசில் நீங்கள் முக்கியமாக ஏதாவது பதிவு செய்து வைத்து இருப்பீர்கள் இதனை மற்றவர் யாரும் மாற்றாமல் இருக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் இதை அந்த குறிப்பிட்ட நபர் மட்டும் அதை படிக்க ஒரு வசதி எப்படி செய்வது வாருங்கள் பார்ப்போம் அதை பற்றிய தகவல்களை.

ஸ்டெப் 1 : நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்த MS வார்டு  டாக்குமெண்ட்டை முதலில் ஓப்பன் செய்ய வேண்டும் 

ஸ்டெப் 2: அதில் ஃபைல் என்பதை க்ளிக் செய்து அதன்பின்னர் கீழே தெரியும் 'புரடொக்ட் டாக்குமெண்ட்' என்பதை க்ளிக் செய்யவும்

ஸ்டெப் 3: அதில் உள்ள 'என்கிரிப்ட் வித் பாஸ்வேர்டு' என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும் 

ஸ்டெப் 4: அதன் பின்னர் ஒரு என்க்ரிப்ட் டாக்குமெண்ட் ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் ஒரு பாஸ்வேர்டை செலக்ட் செய்து பதிவு செய்ய வேண்டும். நீங்கள் கிரியேட் செய்யும் பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக, எளிதில் யாரும் யூஸ் பண்ண முடியாததாக இருக்க வேண்டும். பாஸ்வேர்டை கிரியேட் செய்த பின்னர் ஓகேவை க்ளிக் செய்யவும் 

ஸ்டெப் 5: மீண்டும் ஒரு முறை ஏற்கனவே பதிவு செய்த பாஸ்வேர்டை க்ளிக் செய்து அதன் பின்னர் ஓகேவை க்ளிக் செய்யவும் 

ஸ்டெப் 6: மீண்டும் ஒருமுறை டாக்குமெண்ட்டை சேவ் செய்து பின்னர் டாக்குமெண்ட்டை மூடிவிடவும் 

ஸ்டெப் 7: இப்போது நீங்கள் அதே டாக்குமெண்ட்டை ஓப்பன் செய்து பார்த்தால் நீங்கள் பதிவு செய்த பாஸ்வேர்டை கேட்கும். அந்த பாஸ்வேர்டை பதிவு செய்து அதன்பின்னர் ஓகே செய்தால் டாக்குமெண்ட் ஓப்பன் ஆகும் 

இப்போது நீங்கள் பதிவு செய்த பாஸ்வேர்டை நீக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

ஸ்டெப் 1: ஃபைல் என்பதை கிளிக் செய்தௌ அதன் பின்னர் 'புரடொக்ட் டாக்குமெண்ட் என்பதை க்ளிக் செய்யுங்கள் 

ஸ்டெப் 2: அதில் உள்ள 'என்கிரிப்ட் வித் பாஸ்வேர்டு' என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் புதியதாக ஒரு விண்டோ தோன்றி, அதில் உங்கள் பாஸ்வேர்டு புள்ளிகள் போல் தோன்றும், அதை டெலிட் செய்துவிட்டு பின்னர் ஓகே செய்தால் போதும், 

ஸ்டெப் 3: அதன்பின்னர் டாக்குமெண்ட்டை சேவ் செய்துவிட்டால் உங்கள் டாக்குமெண்டில் உள்ள பாஸ்வேர்டு நீக்கப்பட்டுவிடும். நீங்கள் அடுத்தமுறை அதே டாக்குமெண்ட்டை ஓப்பன் செய்யும்போது பாஸ்வேர்டு இல்லாமல் ஓப்பன் ஆகும்..

இந்த வழிமுறை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறோம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :