ஆன்லைனில் Aadhaar PVC கார்ட் எப்படி உருவாக்குவது ?

ஆன்லைனில் Aadhaar PVC கார்ட் எப்படி உருவாக்குவது ?

முன்னதாக Aadhaar Card பிளாஸ்டிக் லேமினேஷன் மூலம் காகிதத்தால் செய்யப்பட்டதாகும் சிறிது நேரம் கழித்து லேமினேஷன் சேதமடைகிறது. இதற்குப் பிறகு, அதை மீண்டும் லேமினேட் செய்ய வேண்டியிருக்கிறது, ஆனால் நீங்கள் ஆதார் கார்டை மீண்டும் மீண்டும் லேமினேட் செய்வதைத் தவிர்க்க விரும்பினால், நீங்கள் PVC ஆதார் கார்டை பெறலாம் . இதற்கு 50 ரூபாய் மட்டுமே செலவாகும். இதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

ஆதார் கார்ட் எளிதில் சேதமடையாமல் இருக்க PVC (Polyvinyl Chloride) Aadhar Card வழங்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் ஆதார் அட்டையில் சாதாரண ஆதார் அட்டையில் இருப்பது போன்ற தகவல்கள் / விபரங்கள் அச்சடித்து வழங்கப்படும்

PVC ஆதார் கார்ட் என்றால் என்ன ?

PVC ஆதார் கார்ட் என்பது ஆதார் கார்டின் புதிய மற்றும் நீடித்த பதிப்பாகும். PVC மெட்டீரியலால் ஆனது, இது ஆதார் கார்டின் கிரெடிட் கார்டு அளவிலான பதிப்பாகும், மேலும் அசலில் உள்ள அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளது. இந்த கார்ட் மிகவும் பாதுகாப்பானது மற்றும் காகித அடிப்படையிலான பதிப்பைப் போல சேதமடையும் அல்லது கிழிந்துவிடும் ஆபத்து இல்லாமல் வாலேட்டில் எடுத்துச் செல்லலாம். PVC ஆதார் கார்டனது மிகவும் வசதியான மற்றும் நீண்ட கால அடையாளத்தை தேடுபவர்களுக்கு பிரபலமான தேர்வாகி வருகிறது.

இதையும் படிங்க:உங்க குடும்பத்துடன் இந்த வாரம் OTT யில் இந்த படத்தை பார்த்து மகிழுங்கள்

PVC aadhaar card எப்படி உருவாக்குவது ?

  • முதலில் https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint என்ற வெப்சைட்டை பார்க்க வேண்டும்.
  • அதன் பிறகு 12 டிஜிட் ஆதார் கார்ட் நம்பரை உள்ளிட வேண்டும்.
  • நீங்கள் செக்யூரிட்டி கோடை உள்ளிட வேண்டும், அது உங்கள் ஸ்க்ரீனில் தெரியும்.
  • உங்களின் My Mobile number is not registered இல்லை என்றால் ஆப்சன் தெரியும், அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்காத போது இது நடக்கும்
  • மொபைலை ஆதாருடன் லிங்கை மொபைல் நம்பரை உள்ளிட வேண்டும்.
  • மொபைல் நம்பர் லிங்க் செய்யப்பட்டிருந்தால் இந்த விருப்பத்தை நீங்கள் காண மாட்டீர்கள்.
  • அப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதன் பிறகு அவர் வெரிபை செய்ய வேண்டும்.
  • இதற்குப் பிறகு நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.
  • அப்போது 28 டிஜிட் சேவை கோரிக்கை வரும்.
  • இந்த 28 டிஜிட் உதவியுடன் நீங்கள் PVC ஆதார் கார்டை கண்காணிக்க முடியும்.
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo