உங்கள் phone Hackசெய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது

Updated on 21-Feb-2024
HIGHLIGHTS

இந்த இன்டர்நெட் சகாப்தத்தில், போன் hack சம்பவங்கள் அதிகரித்துள்ளன

ங்கள் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

உங்கள் அனைவரின் மனதிலும் இருக்கிறது இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதை கண்டுபிடிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

இந்த இன்டர்நெட் சகாப்தத்தில், போன் hack சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும், டெக்நோலாஜி ஒவ்வொரு துறையிலும் நுழைகிறது, இதன் காரணமாக போனை ஹேக்கிங் செய்வது எளிதாகிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதை எவ்வாறு கண்டுபிடிப்பது? என்ற கேள்விகள் உங்கள் அனைவரின் மனதிலும் இருக்கிறது இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதை கண்டுபிடிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

பேட்டரி லைப்

உங்கள் ஃபோனின் பேட்டரி தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்தால் , உங்கள் ஃபோன் ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் சில நேரங்களில் பேக்ரவுண்டில் இயங்கும் ப்ரவுசிங் ஆப்களால் போனின் பேட்டரி வேகமாக குறைய ஆரம்பிக்கும் . அத்தகைய சூழ்நிலையில், போனின் பேட்டரிக்கு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

online scam hackers

போனில் இருக்கும் தேவையற்ற ஆப்கள்

உங்கள் அனுமதியின்றி எந்த ஒரு ஆப் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யப்படாமல் இருக்க, ஆப்ஸின் விவரங்களை உங்கள் மொபைலில் வைத்திருக்க வேண்டும். இது நடந்தால், அது போன் ஹேக்கிங்கிற்கு வழிவகுக்கும். இந்த அறியப்படாத ஆப்களில் உளவு சாப்வேர் மறைந்திருக்கலாம்.

போன் ஓவர் ஹீட்டிங்

உங்கள் போனில் உங்களை உளவு பார்க்கும் ஆப் வழக்கமாக போன் லோகேசனை உண்மையான நேரத்தில் கண்காணிக்கும், இதற்காக ஜிபிஎஸ் அமைப்பைப் பயன்படுத்துகின்றன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் போனின் சாப்ட்வேரில் அதிகப்படியான அழுத்தம் உள்ளது. இதன் காரணமாக அதிக வெப்பம் ஏற்படும் பிரச்சனை ஏற்படுகிறது.

டேட்டா ஆக்கிரமிப்பு

உங்களின் போனை யாராவது ட்ரேக் செய்தால், உங்களின் டேட்டா அதிகம் எடுக்கப்படும், அத்தகைய சூழ்நிலையில், தரவு நுகர்வு திடீரென அதிகரித்தால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

#

ரிபயர் போன்

ஃபோன் ஹேக்கிங் ஏற்பட்டால், ஸ்கிரீன் ஃபிளாஷ், ஆட்டோமேட்டிக் ஃபோன் செட்டிங் மாறுதல் அல்லது ஃபோன் வேலை செய்யாதது போன்ற போன் ஹேக்கிங் போன்ற சம்பவங்களைக் காணலாம்.

காலிங் பெக்ரவின்ட் காலிங் நோய்ஸ்

சில உளவு ஆப்கள் போன் கால்களை ரெக்கார்ட் செய்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், போன் காலின் போது ஏதேனும் பேக்ரவுண்ட் நோய்ஸ் கேட்டால், ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் அது ஹேக்கிங்கின் அறிகுறியாக இருக்கலாம்.

இதையும் படிங்க: WhatsApp AI-ஜெனரேட்டட் மற்றும் Deep fake தடுக்க இந்தியாவில் ஹெல்ப்லைன் கொண்டு வருகிறது

தேவையற்ற ப்ரவுசிங் ஹிஸ்டரி

ப்ரவுசிங் ஆப்களை கண்காணிப்பது அல்லது பதிவிறக்குவது ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட வெப்சைட்களை கண்டறிய உங்கள் போனில் ப்ரவுசிங் ஹிஸ்டரியை கண்காணிக்கவும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :