நீங்கள் லேப்டாப்பில் வேலை செய்யும்போது, அதன் வேகம் குறைந்தால் நாம் அதில் நிறைய வேலை செய்யும்போது அதன் வேகம் அடிக்கடி குறைந்து பொய் விடுகிறது அதாவது ஹேங்க் ஆகிவிடுகிறது இதனால் நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்ய முடியாமல் பொய் விடுகிறது
முதலில் நீங்கள் இப்படி செய்வதற்கு முன்பு உங்கள் லேப்டாப்பில் ரேம் ஸ்லோட்கள் இருக்கிறதா இல்லையா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். இதை செய்வதற்க்கு செய்ய ஆன்லைனில் சில ஸ்கெனர் ஆப் இருக்கிறது. ஒருவேளை உங்களின் லேப்டாப்பில் ஓபன் ஸ்லாட் இருந்தால், நீங்கள் அதை பயன்படுத்தலாம். கடந்த சில ஆண்டுகளில் இருவரி ரேம்கள் பயன்பாட்டில் உள்ளன, எனினும் இதில் DDR4 ரக ரேம் மட்டுமே அப்கிரேடு செய்யும் வசதி கொண்டுள்ளது.
லேப்டாப்பின் ரேம் மெமரியை அப்கிரேடு செய்வது எப்படி?
ஸ்டெப் 1 – முதலில் லேப்டாப்பை ஷட் டவுன் செய்து, அன்பிளக் செய்ய வேண்டும்
ஸ்டெப் 2- அடுத்து லேப்டாப்பின் மெமரி டிரேவினை செயல் படுத்த வேண்டும். இதற்கு உங்களது லேப்டாப் ரியர் பேனலை கொஞ்சமாகவோ அல்லது ஒரு பகுதியையோ கழற்ற வேண்டும். இதை செய்வதற்கான வழிமுறைகளை லேப்டாப் சர்வீஸ் மேனுவல் அல்லது குறிப்பிட்ட லேப்டாப் நிறுவனங்களின் வெப்சைட்களில் பார்க்க முடியும்.
ஸ்டெப் 3- அனைத்து வித மின்சார இணைப்புகளையும் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். இதற்கு அருகாமையில் உள்ள மெட்டல் பொருளை தொட வேண்டும். இவ்வாறு செய்யும் முன் முறையான ரிஸ்ட் ஸ்டிராப் பயன்படுத்த வேண்டும்.
ஸ்டெப் 4- அடுத்து மெமரி மாட்யூலை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த மாட்யூலில் சிறிய நாட்ச் கொண்டு மெமரி ஸ்லாட்டில் பொருந்தக் கூடியதாக இருக்கும்.
ஸ்டெப் 5 – சரியாக அலைன் செய்ததும், ரேம் மெமரி அதற்கான ஸ்லாட்டில் சரியாக பொருந்தும் படி செய்ய வேண்டும். இதற்கு பொருத்தும் போது சற்று அழுத்தினாலே போதும். மெமரி மாட்யூலை சரியாக பொருத்த கட்டை விரல்களால் இருபுறமும் அழுத்துவது நல்லது.
ஸ்டெப் 6- ரேம் ஸ்லாட்டில் வைத்த பின் இரு புறங்களில் உள்ள மெட்டல் ஆர்ம்கள் கீழே செல்லும் படி அழுத்த வேண்டும், இவ்வாறு செய்யும் போது சிறிய க்ளிக் சத்தம் கேட்கும். சரியாக பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய மாட்யூலை லேசாக வெளியே எடுக்க முயற்சிக்கலாம். இவ்வாறு செய்யும போது மாட்யூல் வெளியே வராமல் இருக்க வேண்டும்.
மெமரி மாட்யூல் அதற்கான ஸ்லாட்டில் சரியாக பொருந்தியிருக்க வேண்டும். மாட்யூலை கழற்ற மெட்டல் ஆர்மை கைவிரல் நகங்களால் இருபுறமும் இழுக்கலாம்.