வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி?
பட்டா ஆன்லைனில் பெற என்ன செய்வது ?
(இணையத்தில் பதிவிறக்கம் செய்ய www.tn.gov.in/LA/forms) அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர்பான ஆவணங்களை ரெஜிஸ்டர் செய்வது ஆகும் நாம் முதலில் ஒருவரின் சொத்தை தமது பெயருக்கு பட்டா மாறுதலுக்காக கிரயம் செய்ய வட்டாட்சி அலுவலத்தை நேரில் செய்து விண்ணப்பிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது, மேலும் மக்கள் பட்டா மாறுதலுக்கு அடிக்கடி அலைச்சலுக்கு உள்ளாகும் வேண்டி நிலை ஏற்பட்டு வந்தது, இது தவிர லஞ்ச இல்லாமல் வேலையும் நடக்காது, இது போன்ற பிரச்சனை போக்க ஆன்லைன் மூலம் பட்ட வாங்கும் வசதியை அரசு சில நாட்களுக்கு முன்பு கொண்டு வந்தது.மேலும் இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் அலைச்சல் குறையும்
நமக்கு ஒரு சொத்து வாரிசுரிமைப்படியோ, பாகப்பரிவினை பத்திரபடியோ, உயில் ஆவணத்தின்படியோ, செட்டில்மெண்ட் பத்திரப்படியோ, விற்பனை மூலம் வாங்கியதாக இருந்தாலோ அதற்கு பட்டா மாற்றம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பட்டா ஆன்லைனில் பெற என்ன செய்வது ?
நமக்கு ஒரு சொத்து வாரிசுரிமைப்படியோ, பாகப்பரிவினை பத்திரபடியோ, உயில் ஆவணத்தின்படியோ, செட்டில்மெண்ட் பத்திரப்படியோ, விற்பனை மூலம் வாங்கியதாக இருந்தாலோ அதற்கு பட்டா மாற்றம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இந்த சான்றுக்கு தனியாக 3 பக்க விண்ணப்பப்படிவம் உள்ளது. (இணையத்தில் பதிவிறக்கம் செய்ய www.tn.gov.in/LA/forms) அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதை ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த விண்ணப்பம் www.tn.gov.in/LA/forms என்ற இணையதளத்தில் கிடைக்கிறது.
இந்த விண்ணப்பத்தை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். பிறகு பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும்.
ஒரு சர்வே நம்பர் முழுவதும் வாங்கியிருந்து அதற்கு பட்டா மாற்றம் 15 நாட்களிலும் ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றம் (உட்பிரிவு) 30 நாட்களிலும் பட்டா மாற்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து நமக்கு செய்து கொடுக்கப்படவேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.80. தாலுகா அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க தேவைப்பாடு ஆவணங்கள்
- விண்ணப்பத்தின் விவரங்கள்
- விண்ணப்பதாரர் பெயர்,
- தகப்பனார்/கணவர் பெயர்,
- இருப்பிட முகவரி,
- பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம். அதாவது
- மாவட்டம்,
- வட்டம்,
- கிராமத்தின் பெயர்,
- பகுதி எண்,
- நகர அளவை எண்/மறுநில அளவை எண்,
- உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர்,
- தெருவின் பெயர்,
- மனைபிரிவு மனை எண்,
- போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்.
- மனை அங்கீகரிக்கப்பட்டதா,
- அங்கீகாரம் இல்லாத மனையா,
என்பது பற்றித் தெரிவதற்காக மனைப்பிரிவு வரைபடத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
பிறகு சொத்து எந்த வகையில் விண்ணபதாரருக்குக் கிடைக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும்..
சான்றுகள்
சம்பந்தப்பட்ட சொத்தை விண்ணப்பதாரர் அனுபவித்து வருவதற்கான சான்றுகளையும் இணைக்க வேண்டும்.
- அதாவது சொத்து வரி ரசீது,
- மின் கட்டண அட்டை,
- குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை,
- குடும்ப அட்டை,
- வாக்காளர் அட்டை
பதிவு மாற்றம் கோரும், இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பின் உட்பிரிவிற்கு கட்டணம் செலுத்திய விவரம். (சலான் எண்/நாள்/தொகை/செலுத்திய வங்கி/கருவூலத்தின் பெயர்) போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் கொடுக்கப்படவேண்டும்.
பட்டா ஆன்லைனில் சரிபார்க்கும் முறை
பட்டா ஆன்லைனில் சரிபார்க்க >www.tn.gov.in என்ற இணையதளத்தில் இ-சேவைகள் பரிவு மாவட்ட அலுவலகங்கள் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். பட்டா அல்லது சிட்டா ஆகியவற்றில் குறிப்பிடப்பட வேண்டிய விவரங்களான மாவட்டம், தாலுகா, கிராமம் மற்றும் பட்டா எண் ஆகியவற்றைக் காணலாம். ஒருவேளை பட்டா எண் தெரியவில்லை என்றால் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். சர்வே எண் (ஏதாவது ஒரு சர்வே எண் போதுமானது) உடன் உட்பிரிவுகளும் நிரப்பப்பட வேண்டும்.
தங்கள் விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து ஒப்புதல் ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். குறித்த காலத்துக்குள் பட்டா வழங்கப்படவில்லை என்றால் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile