ஆதார் கார்ட் என்பது மிகவும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது அதாவது நீங்கள் எந்த ஒரு இடத்திற்க்கு சென்றாலும் முதலில் கேட்கப்படுவதது ஆதார் கார்ட் தான் அரசு சார்ந்த வேலையாக இருந்தாலும் சரி அல்லது பேங்க் மற்றும் பல பொது இடங்களில் ஆதாரின் தேவை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.ஆதாரை பல்வேறு முறைகளில் டவுன்லோடு செய்யும் வசதிகள் வந்துள்ளன. ஒருவேளை நீங்கள் உங்களின் ஆதார் கார்டை தொலைத்துவிட்டால் கூட உங்கள் ஆதாரை டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஆதார் மற்றும் UIDAI நம்பரை எந்நேரம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை.
பிறந்த தேதி, பெயரை வைத்து ஆதார் டவுன்லோட்
1. ஆதாரின் இந்த இணைய முகவரிக்கு செல்லுங்கள் //resident.uidai.gov.in/find-uid-eid
2. அதில் உங்களின் பெயர், நீங்கள் முறையாக பதிவு செய்த இ-மெயில் ஐ.டி. அல்லது போன் நம்பரை உள்ளீடாக தர வேண்டும்
3. ஓ.டி.பி பட்டனை க்ளிக் செய்யவும்
4. உங்களின் மின்னஞ்சல் அல்லது போன் நம்பருக்கு ஒன் டைம் பாஸ்வர்ட் அனுப்பப்படும்.
5. அதனை நீங்கள் வெரிஃபை செய்தவுடன் உங்களின் போனுக்கு ஆதார் எண் அனுப்பப்படும்.
UIDAI எண்ணைப் பெறுவது எப்படி ?
1. UIDAI இன்டர்நெட்டில் இருக்கும் ஈ ஆதார் (e-Aadhaar) பக்கத்திற்கு செல்லவும்
2. அதில் ஐ ஹேவ் ஆதார் என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்
3. அதில் உங்களின் ஆதார் எண்ட்ரொல்மெண்ட் எண், முழுப்பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடாக தர வேண்டும் .
4. பின்னர் ஓ.டி.பி ப்ராசஸ் முடிவுற்றவுடன் உங்களின் ஆதாரை டவுன்லோட் செய்தவற்கான டவுன்லோட் ஆதார் என்ற ஆப்சன் வரும். அதை க்ளிக் செய்து ஆதாரைப் பெற்றிடவும்.