Aadhaar கார்டில் பயோமெட்ரிக் இல்லாமல் எப்படி விண்ணபிப்பது?
Aadhaar கார்ட் தொடர்பாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Aadhaar கார்ட் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
பிங்கர்ப்ரின்ட் மற்றும் ஐரிஷ் ஸ்கேன் இல்லாமல் ஆதார் கார்டை உருவாக்கலாம்.
Aadhaar கார்ட் தொடர்பாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பயோமெட்ரிக் விவரம் இல்லாமல் 29 லட்சம் பேருக்கு Aadhaar கார்ட் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பிங்கர்ப்ரின்ட் மற்றும் ஐரிஷ் ஸ்கேன் இல்லாமல் ஆதார் கார்டை உருவாக்கலாம். மக்களவையில் (Lok Sabha) ஏலேக்ற்றோனிக் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், பயோமெட்ரிக் இல்லாமல் ஆதாரை உருவாக்க சில விதிகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்…
டிசம்பர் 20, 2023 அன்று Lok Sabha யில் பகிரப்பட்ட தகவலின் படி 29 லட்சம் இந்தியர்கள் பயோமெட்ரிக் இல்லாமல் ஆதார் பெற்றுள்ளனர்.UIDAI கொடுத்த தகவலின் படி 29 லட்ச பேர்களின் பிங்கர்ப்ரின்ட் மிஸ்ஸிங் ஆகி இருப்பது தெரிய வந்துள்ளது
யார் பயோமெட்ரிக் இல்லாத ஆதார் கார்ட் பெற முடியும்?
பயோமெட்ரிக் இல்லாமல் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க, உங்களிடம் சரியான மருத்துவக் காரணம் இருக்க வேண்டும். அதாவது, உங்கள் பிங்கர்ப்ரின்ட் மங்கலாக இருந்தாலோ அல்லது கைகள் இல்லாமலோ இருந்தால், மருத்துவச் சான்றிதழைக் கொடுத்து ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், உங்கள் கண்கள் மோசமாக இருந்தால் அல்லது உங்களுக்கு கண்கள் இல்லை என்றால், அந்த சூழ்நிலையிலும் நீங்கள் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
Aadhaar மையத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன
பிங்கர்ப்ரின்ட் அல்லது கண்கள் மற்றும் கைகள் மங்கலாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் கார்ட் வழங்க ஆதார் சேவை மையத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிவித்துள்ளார். யாரேனும் பிங்கர்ப்ரின்ட் மங்கலாக இருந்தால், IRIS ஸ்கேன் மூலம் மட்டுமே ஆதார் கார்டை உருவாக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், ஐரிஷ் ஸ்கேன் இல்லாதவர்கள் பிங்கர்ப்ரின்ட் மூலம் ஆதாருக்கு விண்ணப்பிக்கலாம்.
Aadhaarகார்டில் பயோமெட்ரிக் இல்லமல் எப்படி அப்ளை செய்வது?
பிங்கர்ப்ரின்ட் மற்றும் கருவிழி பயோமெட்ரிக் இரண்டையும் வழங்க முடியாதவர்கள் ஆதார் இல்லாமல் விண்ணப்பிக்கலாம் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அத்தகைய நபர்கள் பெயர், பாலினம், முகவரி மற்றும் தேதி ஆகியவற்றின் அடிப்படையில் ஆதாருக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் கைகள் மற்றும் கண்களின் மருத்துவ சான்றிதழை வழங்க வேண்டும். மேலும், ஆதார் கார்டில் உங்கள் ஊனத்தின் போட்டோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க : Excitel அறிமுகம் செய்தது 400Mbps ஸ்பீட் மற்றும் 17 OTT சப்ஸ்க்ரிப்சன் கொண்டிருக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile