உங்களின் ஆதார் கார்ட் எங்கெங்கு பயன்படுத்த பட்டது எப்படி தெரிந்து கொள்வது..!

உங்களின் ஆதார் கார்ட் எங்கெங்கு பயன்படுத்த பட்டது எப்படி  தெரிந்து கொள்வது..!
HIGHLIGHTS

இனி நீங்கள் கவலையை விடுங்க உங்களின் ஆதார் கார்டை எத்தனை முறை எங்கு எங்கு பயன்படுத்தாது என்பதை பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம் அது எப்படி வாங்க பாக்கலாம்

நாம்  அன்றாட  வாழ்வில் எந்த ஒரு அரசாங்கத்தை  சார்ந்த வேலை அல்லது எந்த துறையிலும் ஆதார் கார்ட்  மிகவும் பயன்படுகிறது, இதணலாய் தொடர்ந்து சமீபத்தில்  ஆதார் நம்பர் இருந்த போதும் தங்களின்  தகவல்களை எளிதாக ஹேக் செய்ய முடியும் என பார்த்தோம், அதன் காரணமாகவே வெளியில்  ஆதார் கார்டை கொடுப்பதற்கு சிலர் பயப்புடுகிறார்கள் இருந்தாலும் ஆதார் கார்டை நீங்கள் இதுவரை கொடுத்த்ததில் எத்தனை முறை எங்கு எங்கு  பயன்படுத்தப் பட்டது என்பதை குறித்து நிறைய  பேருக்கு  குழப்பம் இருக்கும் அதுமட்டுமில்லாமல் இதை  எப்படி தேய்ந்து கொள்வது என்ற கேள்வி பல பேருக்கு மனதில் எழுப்புகிறது 

பல அங்கீகாரத்திற்காகவும், சரிபார்ப்பு நோக்கங்களுக்காகவும், உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தினீர்கள் எனில், உங்கள் தனியுரிமை குறித்து நீங்கள் கவலைப்படலாம். கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் கார்ட் எங்கு எங்கு  பயன்படுத்தப்பட்டது என்பதை சரிபார்க்க ஒரு வழி உள்ளது. உங்கள் ஆதார் கார்டில் யூஸேஜுல் ஏதேனும் முரண்பாடு இருந்தால், UIDAI வெப்சைட்டிலிருந்து புகார் கொடுக்கலாம். உங்கள் ஆதார் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கவும் இந்த வெப்சைட் உதவுகிறது.

இனி நீங்கள் கவலையை விடுங்க உங்களின் ஆதார் கார்டை எத்தனை முறை எங்கு எங்கு பயன்படுத்தாது என்பதை பற்றி எளிதாக  தெரிந்து கொள்ளலாம்  அது எப்படி வாங்க பாக்கலாம் 

உங்கள் ஆதார் எங்கு எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை சரிபார்ப்பது எப்படி?

ஸ்டேப் 1  UIDAI வெப்சைட்  சென்று ஆதார் ஆத்தன்டிகேசன் ஹிஸ்டரி  பக்கத்துக்கு https://resident.uidai.gov.in/notification-aadhaar  செல்ல வேண்டும்.

ஸ்டேப் 2 12 டிஜிட் ஆதார் நம்பரை மற்றும்   படத்தில்  கொடுத்திருக்கும் செக்யூரிட்டி கொடும் என்டர் செய்ய வேண்டும் 

ஸ்டேப் 3  OTP'.  ஜெனரேட் ஒப்சனில்  க்ளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப் 4  இப்பொழுது உங்கள் ஆதார் கார்டில் லிங்க் செய்யப்பட்டு இருந்த  மொபைல்  நம்பருக்கு OTP  வரும். OTP ஐ பெறுவதற்காக, உங்கள் மொபைல் நம்பர் UIDAI வெப்சைட்  உடன் சரிபார்க்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஸ்டேப் 5  OTP இல் என்டர் செய்த பிறகு அங்கீகரிப்பு வகை, தேர்வு தேதி ரேஞ்ச், பதிவு எண் (அதிகபட்ச பதிவு 50) மற்றும் OTP போன்ற விருப்பங்களுடன் ஒரு பக்கம் திறக்கும். நீங்கள் தேடும் அனைத்து அங்கீகார வகையையும் தேர்வு செய்ய வேண்டும் மற்றும் தேதி வரம்பை தேர்ந்தெடுக்கவும். குறிப்பிடத்தக்க வகையில், அதிகபட்ச காலம் வரை ஆறு மாதங்கள் ஆகும். இப்போது, ​​நீங்கள் ஒரு பக்கத்தில் பார்க்க விரும்பும் பதிவுகளின் எண்ணிக்கையை என்டர் , OTP என்டர் செய்து சாபமிட்ட செய்ய வேண்டும் 

ஸ்டேப் 6 தேதி, நேரம் மற்றும் ஆதார் அங்கீகரிப்பு கோரிக்கைகளின் வகை தேர்வு செய்யப்பட்ட காலங்களில் நீங்கள் பார்ப்பீர்கள். இந்த கோரிக்கைகளை யார் செய்தார் என்பதை இந்த பக்கம் காண்பிப்பதில்லை என்றாலும், கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் எங்கே பயன்படுத்தப்பட்டது என்பதையும், உங்கள் விவரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதா என்பதை அறிந்து கொள்வதும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo