வெப்சைட்டில் உள்ள உங்களது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டால் அதை அறிந்துகொள்ள உதவும் ஒரு வெப்சைட் குறித்து… தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்
தனிநபர் தகவல் திருட்டு ஒருவரின் வாழ்க்கையையே பொருளாதார ரீதியாகவும், சோசியல் மீடியாவில் மதிப்பு ரீதியாகவும் தலைகீழாக புரட்டிப்போடக்கூடியது.ஆப்கள் முதல் பலரும் பெரும்பான்மையான நேரத்தை செலவிடும் சோசியல் மீடியா வெப்சைட்கள் வரை அனைத்தும் ஹேக்கிங் மூலம் பலரும் பாதிக்கப்பட்டுள்ளன.
நாம் ஒரு முறை பயன்படுத்திய வெப்சைட்களில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஈமெயில்,, பயனர் பெயர், பாஸ்வர்ட் கொடுத்திருப்போம் எனவே, தினசரி பயன்படுத்தாத அல்லது அறிமுகம் இல்லாத வெப்சைட்கள் ஹேக் செய்தால் உங்களது முக்கிய தகவல்கள் பொதுவெளியில் வெளியாகி, அதே பயனர் பெயர்/ பாஸ்வர்ட் கொண்டு உருவாக்கப்பட்ட மற்ற வெப்சைட்களில் தொடங்கிய அக்கவுங்கள் பறிபோக வாய்ப்புள்ளது.
இந்நிலையில், உங்களது ஈமெயில் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட அக்கவுண்ட் வெப்சைட்கள் ஹேக் செய்யப்பட்டால் அல்லது எதிர்காலத்தில் ஹேக் செய்யப்பட்டால் அதுகுறித்த தகவல்களை வழங்கும் https://haveibeenpwned.com/ என்ற வெப்சைட்டில் பார்க்க முடியும்
இதனுடன் இங்கு குறிப்பிட பட்ட வெப்சைட்டிற்கு சென்று, உங்களது ஈமெயில் முகவரியை போடவும் , அதை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வெப்சைட் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதையும், நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அது தவிர பிற்கலத்தில் ஹேக் செய்யப்பட்டால் அதை குறித்த தகவலையும் இதன் மூலம் பெறலாம்.