பப்ஜி லைட் பீட்டா இந்தியாவில் வெளியாகியுள்ளது. இதனை பயனர்கள் டவுன்லோடு செய்து குறைந்த பவர் கொண்ட கம்பியூட்டர்களில் விளையாட முடியும். இதற்கான முன்பதிவுகள் கடந்த மாதம் துவங்கியது. இந்நிலையில், பப்ஜி லைட் பீட்டா வெளியாகி முதல் அப்டேட் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் பப்ஜி லைட் விளையாட என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
பப்ஜி லைட் பீட்டா பதிப்பினை பயனர்கள் பப்ஜி லைட் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்ததும் உங்களது கம்ப்யூட்டரில் .exe ஃபைல் டவுன்லோடு ஆகும், அதனை க்ளிக் செய்ததும் பப்ஜி லான்ச்சர் இன்ஸ்டால் ஆகிவிடும். இனி கூடுதலாக மற்றொரு கேம் ஃபைலை டவுன்லோடு செய்ய வேண்டும்.
பப்ஜி லைட்
இத்துடன் உங்களது கணினிக்கான என்விடியா, இன்டெல் மற்றும் ஏ.எம்.டி. ரேடியான் டிரைவர்களையும் டவுன்லோடு செய்ய வேண்டும். இனி பயனர்கள் பப்ஜி அக்கவுண்ட் உருவாக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள், லாக் இன் செய்தாலே போதுமானது. கேம் விளையாட தேவையான ஃபைல்களை இன்ஸ்டால் செய்ததும், விளையாட துவங்கலாம்.
இந்தியாவில் பப்ஜி விளையாட இந்தி மொழி வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர கேமினை விளையாட முன்பதிவு செய்தவர்களுக்கு பப்ஜி பிளாக் ஸ்கார்ஃப், பன்க் கிளாசஸ், பிளடி காம்பேட் பேண்ட் உள்ளிட்டவற்றை வழங்கப்படுகிறது. இவற்றுக்கான பாஸ்வர்ட் ஈமெயில் மூலம் ஜுலை 11 ஆம் தேதி வழங்கப்படுகிறது.
கம்பியூட்டரில் குறைந்தபட்சம் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், இன்டெல் HD கிராஃபிக்ஸ் 4000 மற்றும் 4 ஜி.பி. ஸ்பேஸ் இருக்க வேண்டும்.
பப்ஜி லைட் கேமினை இலவசமாக விளையாட முடியும் என்றாலும், கேம் விளையாடும் போது சில அம்சங்களை பணம் கொடுத்து வாங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேம் குறைந்த திறன் கொண்ட கணினிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், கேமினை விளையாட குறைந்தபட்சம் விண்டோஸ் 7, 8 அல்லது 64 பிட் விண்டோஸ் 10 இயங்குதளங்களை பயன்படுத்த வேண்டும்.