Instagram யில் புதிய AI அம்சம் இனி உங்க ப்ரோபைல் பார்த்து மயங்கிபோவங்க
Instagram யில் ஒரு புதிய ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) அம்சத்தில் வேலை செய்து வருகிறது
AI பயன்படுத்தி புதிய ப்ரோபைல் போட்டோக்களை உருவாக்க AI மாதிரிகளைப் பயன்படுத்த முடியும்.
டெவலப்பர் அலெஸாண்ட்ரோ பலுஸி, இன்ஸ்டாகிராம் ஆப்யில் இந்த அம்சத்தின் ஆதாரங்களைக் கண்டறிந்து
Instagram யில் ஒரு புதிய ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) அம்சத்தில் வேலை செய்து வருகிறது இது உங்களின் ப்ரோபைல் போட்டோ உருவாக்க உதவும், AI பயன்படுத்தி புதிய ப்ரோபைல் போட்டோக்களை உருவாக்க AI மாதிரிகளைப் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கும் அம்சத்தை மெட்டாவுக்குச் சொந்தமான சோசியல் மீடியா தளம் டெஸ்டிங் செய்வதாக ஒரு புதிய லீக் கூறுகிறது. இந்த அம்சம் பற்றி இதுவரை அதிகம் தெரியவில்லை என்றாலும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பிலும் இதே போன்ற அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Instagram யில் புதிய AI அம்சம்
டெவலப்பர் அலெஸாண்ட்ரோ பலுஸி, இன்ஸ்டாகிராம் ஆப்யில் இந்த அம்சத்தின் ஆதாரங்களைக் கண்டறிந்து, த்ரெட்ஸில் ஒரு இடுகையில் அதைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது ப்ரோபைல் படத்தைப் அப்டேட் செய்யும்போது , புதிய மெனு விருப்பத்தைப் பார்த்தார், இது AI ப்ரோபைல் போட்டோ உருவாக்குவதற்கான விருப்பத்தை வழங்குகிறது. மெனுவின் ஸ்கிரீன்ஷாட்டும் டெவலப்பரால் பகிரப்பட்டது.
View on Threads
இருப்பினும் இந்த அம்சத்தை பயன்படுத்துவது என்பது சற்று கடினமாக இருக்கலாம் ஏன் என்றால் இப்பொழுது இந்த அம்சம் டெவலப்மெண்டில் இருக்கிறது. இது மெட்டாவின் லாமா பெரிய மொழி மாதிரிகளில் (LLM) ஒன்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த அம்சம் இரண்டு வழிகளில் வேலை செய்ய முடியும் – இது பயனர்கள் டெக்ஸ்ட் அடிப்படையிலான ப்ராம்ட்டைப் பயன்படுத்தி புதிதாக AI போட்டோவை உருவாக்க அனுமதிக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள ப்ரோபைல் படத்தை வெவ்வேறு வடிவங்களில் திருத்த AI ஐப் பயன்படுத்தலாம்.
இது இன்ஸ்டக்ராமில் வர போகும் முதல் AI அம்சமாக இருக்காது மெட்டாவுக்குச் சொந்தமான பிளாட்பார்மில் ஏற்கனவே அதன் சாட்போட் Meta AIக்கான அக்சஸ் தனித்தனி சேட்கள் மற்றும் க்ரூப் சேட்கள் வடிவில் வழங்குகிறது. DM ரூஇஊபெஅதறம்மற AI மீண்டும் எழுதும் அம்சத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்கள் மற்ற பயனர்களுக்கு அனுப்பப்படும் ரூஇஊபெஅதனல டோன் மீண்டும் எழுதவும் மாற்றவும் அனுமதிக்கிறது.
இதையும் படிங்க :Instagram யில் இந்த செட்டிங் உடனே செய்துவிடுங்க இல்லயெனில் மொத்த டேட்டாவும் லீக்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile