உங்கள் போனில் வொய்ஸ் மூலம் தமிழில் டைப் செய்வது எப்படி?
கூகுள் நிறுவனத்தின் வொய்ஸ் வழித் சர்ச் பயன்படுத்தி வொய்ஸ் மூலம் தமிழில் டைப் செய்வது என்பது குறித்து பார்க்கலாம் .
கம்பியூட்டர் மற்றும் ஸ்மார்ட்போனின் மக்களுக்கு இப்பொழுதெல்லாம் மிகவும் முக்கியமாகி விட்டது. உலகம் முழுதும் ஸ்மார்ட்போன் மெசேஜ் அல்லது பல சார்ச் விசயத்துக்கு ஸ்மார்ட்போன் மிகவும் முக்கியமாகிவிட்டது அந்த வகையில், டைப் செய்ய சிரமமாக இருப்பதால் தமிழ் மொழில் டைப் செய்வது எப்படி என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது, தொழில்நுட்பத்தின் அசத்தல் வளர்ச்சியில் இதுக்கு ஒரு பதில் கிடைக்காதா என்று பல பேரிடத்தில் கேள்வி எழுந்தது.
கூகுள் நிறுவனத்தின் வொய்ஸ் வழித் சர்ச் பயன்படுத்தி வொய்ஸ் மூலம் தமிழில் டைப் செய்வது என்பது குறித்து பார்க்கலாம் .
கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று, ஜிபோர்டு (Gboard) என்ற செயலியை டவுன்லோடு செய்து, உங்களது போனில் இன்ஸ்டால் செய்யுங்கள்
பிறகு உங்களது போனின் செட்டிங்ஸ் (Settings) பகுதிக்கு சென்று, அதில் லாங்குவேஜஸ் & இன்புட் (Languages & Input) என்ற பிரிவை செலக்ட் செய்து அதில் ஜி போர்டு (Gboard) என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். அதில் வாய்ஸ் டைப்பிங் (Voice Typing) என்பதை தேர்ந்தெடுத்தவுடன் வரும் ஸ்கிரீனில் லாங்குவேஜஸ் (Languages) என்ற ஒப்சனில் ஏற்கனவே தமிழை தவிர்த்து இங்கிலிஷ் உள்பட எந்த மொழி செலக்ட் செய்யப்பட்டு இருந்தாலும், அதை நீக்கிவிட்டு தமிழை (இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய ஏதாவது ஒன்றை) செலக்ட் செய்யுங்கள் .
வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட எல்லா ஆப்களிலும் , உங்களது கீ போர்டில் உள்ள வொய்ஸ் வழி பதிவை (மைக் ஐகான்) தேர்ந்தெடுத்து உங்களது வொய்ஸ் உடனடியாக தமிழ் எழுத்துக்களாக மாற்றுங்கள்!
(Settings – Languages & Input – ஆகியவற்றை தேர்ந்தெடுத்த பிறகு, உங்களது போனில் கூகுள் வாய்ஸ் டைப்பிங் (Google Voice Typing) – என்ற ஆப்சன் இருந்தால், அதில் Languages பிரிவில் தமிழை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஜிபோர்டு ஆப் டவுன்லோடு செய்யாமலேயே உங்களால் தமிழில் வொய்ஸ் மூலம் டைப் செய்ய முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile