உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டால், அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் உள்ள அனைவருக்குமே ஆபத்து ஹேக் பண்ணுற அளவுக்கு நம்ம ஃபேஸ்புக் அக்கவுண்ட்ல என்ன இருக்கு? என்கிற நினைப்பு இருக்கு மிஞ்சு போன போட்டோ, ப்ரொபைல் உங்களின் போட்டோவை மோப் செய்து என்ன வேணாலும் பண்ணலாம் இதுக்கு அசால்ட் ஆக இருக்க கூடாது சரி அப்போ ரிகவர் செய்ய என்ன பண்ணனும்.
உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டும், அதிலுள்ள உங்களை பற்றிய (உங்கள் நண்பர்களை பற்றிய) தகவல்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். ஒருவேளை ஹேக் செய்யப்பட்டால் பதட்டம் அடைய வேண்டாம், பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:
உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு உள்ளதை நீங்கள் கண்டறிந்தால் முதலில் செய்ய வேண்டியது உங்கள் பாஸ்வேர்ட்-ஐ மாற்றுவதுதான்!
– அதை செய்ய 'ப்ரைவஸி & செட்டிங்ஸ்' என்கிற விருப்பத்திற்குள் செல்லவும்
– பின்னர் பாஸ்வேர்ட் & செக்யூரிட்டி என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
– அடுத்ததாக 'சேன்ஞ் பாஸ்வேர்ட்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்களின் பழைய / முந்தைய பாஸ்வேர்ட்-ஐ மனதளவில் குறித்துக்கொண்டு, புதியதை உருவாக்கவும்.
அதே "பாஸ்வேர்ட் & செக்யூரிட்டி" பக்கத்தில் நீங்கள் லாக்-இன் செய்த டிவைஸ்களின் லிஸ்டையும் பார்க்கலாம். கீழ்தோன்றும் மெனுவிலிருந்து "வேர் யு ஆர் லாக்டு இன் (Where You're Logged in) என்பதை கிளிக் செய்யவும். அதில் உங்களுக்குச் சொந்தமில்லாத டிவைஸ் அல்லது நீங்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தாத கம்ப்யூட்டரை கண்டறிந்தால், உடனடியாக உங்கள் அக்கவுண்ட்-ஐ டி ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
– சந்தேகத்திற்கிடமான லாக் இன்-ஐ தேர்ந்தெடுக்கவும்.
– செக்யூர் அக்கவுண்ட் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
– மேலதிக பாதுகாப்புகளை கட்டவிழ்த்து விட ஃபேஸ்புக் சொல்லும் நடைமுறைகளைப் பின்பற்றவும்.
பேஸ்புக்கின் 'ஹெல்ப்' பக்கத்தையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
– செக்யூரிட்டி & பாஸ்வேர்ட் பக்கத்திற்குச் செல்லவும்.
– கெட் ஹெல்ப் என்பதை தேர்வு செய்யவும்.
– பிறகு உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும்.
ஒருவேளை உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்ட பிறகு, குறிப்பிட்ட ஹேக்கர் உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டிற்குள் உங்களை நுழைய விடாதபடி லாக் செய்திருந்தால் Facebook.com/hacked-க்கு செல்லவும். இதற்கு உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் உடன் தொடர்புடைய தொலைபேசி எண்ணை உள்ளிடும்படி கேட்கப்படுவீர்கள். நீங்கள் உள்ளிடும் தொலைபேசி எண் ஆனது உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுடன் பொருந்தினால், உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டிற்கான அணுகலை மீண்டும் பெற ஃபேஸ்புக் உங்களுக்கு உதவும்.