வாட்ஸ்ஆப்யில் வரும் வதந்தி பரவுவதை தடுப்பது எப்படி?

Updated on 18-Aug-2018
HIGHLIGHTS

பெரும்பாலும் வாட்ஸ்ஆப்யில் போலி மெசேஜ் பரவி வருகிறது அதை தடுப்பதற்கு வாட்ஸ் அப் சில அட்வைஸ் வழங்கியுள்ளது.

வாட்ஸ்ஆப்யில்  வரும் வதந்தி பரவுவதை தடுப்பது எப்படி தடுப்பது தவறான செய்திகள், தகவல்கள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் அப் நிர்வாகம் அதன் பயனர்களுக்கு புதிய வேண்டுகோளை வைத்துள்ளது. அதன்படி, வாட்ஸ்அப்பில் வரும் தகவல்கள் புதிதாக வரப்பட்டதா ? அல்லது ஃபார்வேர்ட் செய்யப்பட்டதா? என்பதை அறியும் வசதி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. யார் அந்த தகவலை பதிவு செய்தது? என தெரியாதபட்சத்தில் அதன் உண்மைத் தன்மையை இருமுறை பரிசோதிக்க வேண்டும்.

போட்டோக்கள் , வீடியோக்களை பார்க்கும்போது அதுதொடர்பான தகவல் உண்மையானதா என்பதை இன்டர்நெட்டில் தேடி சரி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு தகவலை உறுதிப்படுத்த நியூஸ் போர்டல் பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட செய்தி இணையதளங்களில் அந்த தகவல் இருந்தால் அது உண்மையானதாக இருக்க வாய்ப்புள்ளது.

நம்பவே முடியாத தகவல், செய்தியாக இருந்தால் பெரும்பாலும் அது தவறான தகவலாகவே இருக்க வாய்ப்புள்ளது. அதன் உண்மைத் தன்மையே வேறு இடத்தில் சோதித்து அறிய வேண்டும். அச்சுறுத்தும் மற்றும் கோபப்படுத்தும் நோக்கோடு ஒரு தகவல் பகிரப்பட்டதாக உணர்ந்தால் அதை மற்றவருக்கு பகிரும் முன் இருமுறை யோசிக்க வேண்டியது அவசியம்.

பரிச்சயமான இணையதளத்தின் பக்கம்போல சில இணைப்புகள் அனுப்பப்பட்டாலும் அதில் சில எழுத்துகளோ, வார்த்தைகளோ மாறி இருந்தால் அது தவறானதாக இருக்கும். பலமுறை உங்களுக்கு பகிரப்பட்டுள்ளது என்பதற்காக அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தவறான தகவல்களே பெரும்பாலும் அதிகமாகவும், வேகமாகவும் பரவுகின்றன.

குழந்தை கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக பரவும் வதந்திகளால் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டநிலையில் வதந்திகளை தடுக்குமாறு வாட்ஸ்அப் நிர்வாகத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதனைத் தொடர்ந்தே தனது பயன்பாட்டாளர்கள் எந்த வகையில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :